ஒரு பக்கம் திரிஷா.. மறுபக்கம் அபிராமி.. தக் லைஃப் படத்தில் கமல் செம ரொமான்ஸ்..காதல் மன்னன் இஸ் பேக்?
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவாகியிருக்கும் இப்படம் ஜூன் ஐந்தாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ட்ரெய்லருக்கு ரசிகர்களிடையே ஏகோபித்த ஆதரவு கிடைத்திருக்கிறது. குறிப்பாக கமலும், சிம்புவும் சேர்ந்து செம மேஜிக் செய்திருக்கிறார்கள் என்று ட்ரெய்லரை பார்த்தவர்கள் மகிழ்ச்சியோடு கூறிவருகிறார்கள்.
அரசியலுக்கு சென்ற கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்தப் படத்துக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2வில் நடித்தார். அப்படத்தின் மீது கமலும் அவரது ரசிகர்களும் உச்சக்கட்ட நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்து மிகப்பெரிய ட்ரோலையும் சந்தித்தது. கமலின் கரியரிலேயே அந்தப் படம்தான் அதிகம் ட்ரோலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
தக் லைஃப்: இப்படிப்பட்ட சூழலில்தான் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடிக்க கமிட்டானார் அவர். இதில் அவருடன் சிம்பு, திரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே கமல் - மணி கூட்டணியில் நாயகன் படம் வெளியாகி மெகா ஹிட்டாகியிருக்கிறது. எனவே இந்தப் படமும் அந்த ரேஞ்சுக்கு இருக்குமா? அதே போன்ற ஒரு ஹிட்டை பெறுமா என்ற பல கேள்விகள் திரைத்துறையினரிடமும், ரசிகர்களிடையேயும் பலமாகவே எழுந்திருக்கிறது.

வெளியான ட்ரெய்லர்: படத்தின் ட்ரெய்லரானது இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று மாலை 5 மணிக்கு ட்ரெய்லர் வெளியானது. ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கமல், சிம்பு, மணிரத்னம், அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி என படத்தில் பணியாற்றிய பலரும் கலந்துகொண்டார்கள். பெரிய ஆரவாரத்துடன் தக் லைஃப் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்துக்கொண்டிருக்கிறார்கள்.
கமல் ப்ளஸ் சிம்பு: படத்தின் ஹைலைட்டே சிம்புவும், கமலும் இணைந்திருப்பதுதான். சிம்பு இதில் கமிட்டானபோதே அவருக்கு என்ன மாதிரியான ரோல் கொடுத்திருப்பார்கள் என்று எஸ்டிஆர் ரசிகர்கள் உச்சக்கட்ட ஆவலோடு இருந்தார்கள். ட்ரெய்லரை பார்க்கையில் சிம்பு கமலின் வளர்ப்பு மகன் என்பதும், இரண்டு பேரும் கேங்ஸ்டர்கள்; ஒருகட்டத்தில் இரண்டு பேருக்கும் மோதல் உருவாகி யார் வெல்கிறார்கள்; அதிகாரம் யார் வசம் செல்கிறது என்பதுதான் கதை என்று உறுதியாகியிருக்கிறது. இரண்டு பேரும் சேர்ந்து செம மேஜிக் செய்திருக்கிறார்கள் என்றே கூற வேண்டும். அதிலும் சிம்புவுக்கு ஒவ்வொரு சீனும் மாஸாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதுதான் கதையா?: ட்ரெய்லரை பெரும்பாலானோர் கொண்டாட ஆரம்பித்தாலும் அதில் இடம்பெற்றிருக்கும் பல விஷயங்களை ஒருதரப்பினர் டீகோட் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அதாவது ட்ரெய்லரில் இடம்பெற்ற காட்சிகளை எல்லாம் பார்க்கையில் தீனா, ஜில்லா, செக்கச்சிவந்த வானம் போன்ற படங்களின் வாடையும் இதில் ஹெவியாக அடிக்கிறது என்ற கருத்தையும் முன்வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க இன்னொரு விஷயத்தை பார்த்து கமலின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருந்திருக்கிறார்கள்.

காதல் மன்னன் கமல்: அதாவது கமலின் படங்கள் என்றாலே லிப் லாக்கும், காதல் காட்சிகளும் வழிந்தோடும். கடைசியாக வெளியான அவரது இரண்டு படங்களிலுமே அது மிஸ்ஸாகியிருந்தது. தக் லைஃப் படத்திலோ அபிராமிக்கு ஒரு லிப் லாக் வைக்கும் கமல்ஹாசன், திரிஷாவுடனும் காதலில் இருக்கிறார். எனவே இப்படத்தில் அவருக்கு அபிராமி, திரிஷா ஆகிய இரண்டு பேருமே ஜோடி என்பது உறுதியாகியிருக்கிறது. அதனால் இந்தப் படத்தில் காதல் மன்னன் கமல் மீண்டும் வந்துவிட்டார் என்று அவரது ரசிகர்கள் உற்சாகத்தோடு பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











