கையில் பாப்கானுடன் கமல்.. கொஞ்சம் வீரம்.. மலர்ந்தும் மலராத காதல்.. பூடகமா அரசியல்.. அலசல் புரமோ!

சென்னை: கையில் பாப்கானுடன் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை அலசும் கமலின் அசத்தல் புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடிகர் கமல்ஹாசன் போட்டியாளர்களை சந்திப்பது வாடிக்கையான ஒன்று.

அந்த வகையில் இன்றும் அகம் டிவி வழியே நடிகர் கமல்ஹாசன் போட்டியாளர்களை சந்தித்துள்ளார். நடிகர் கமல் பங்கேற்கும் எபிசோடின் முதல் புரமோ தற்பேது வெளியாகியுள்ளது.

கையில் பாப்கானுடன்

கையில் பாப்கானுடன்

இதில் கையில் பாப்கானுடன் வந்துள்ள கமல் அதனை கொரித்துக்கொண்டே கெத்து காட்டியுள்ளார். பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் நடந்த அனைத்து சம்பவங்கள் குறித்தும் அலசப்போகிறார் என்பது இன்றைய புரமோவில் தெரிந்துள்ளது.

ஒன்னும் குறைச்சல் இல்லை

ஒன்னும் குறைச்சல் இல்லை

புரமோவில் கமல் பேசியிருப்பதாவது, போன வாரம் உள்ளே இருந்து ஒரு கேள்வி வந்துச்சு பாத்தீங்களா? சினிமா தியேட்டர்லாம் திறந்துட்டாங்களான்னு.. ஆனா இதிலே ஒன்னும் குறைச்சல் இல்லை. ஒரு சினிமாவுக்கு வேண்டிய எல்லா கதம்பமும் இதிலேயும் இருக்கு.

பூடகமா அரசியல்

பூடகமா அரசியல்

கொஞ்சம் வீரம் இருக்கு மலர்ந்தும் மலராத காதல் இருக்கு. அம்மா புள்ள சென்டிமென்ட் நிறையா இருந்துச்சு.. பாசம் சும்மா பொங்கிருச்சுங்க.. இதுக்கெல்லாம் பூடகமாக உள்ள ஒரு அரசியல் இருந்துச்சு கவனிச்சீங்களா?

வரலாற்று சம்பவங்கள்

வரலாற்று சம்பவங்கள்

அரசியல்ன்னா மேடை வேணும் நின்னு பேசனும்.. என கூறும் கமல், சைகையாலே வாங்க என உள்ளே அழைக்கிறார். முதல் புரமோவை பார்க்கும் போதே, பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் நடந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவங்களை பார்த்துள்ளார் என தெரிகிறது.

எதை குறிப்பிடுகிறார்?

எதை குறிப்பிடுகிறார்?

குறிப்பாக அர்ச்சனா பாலாஜியின் விஷயத்தை பேசும் போது கமலின் குரலில் ஒரு நக்கல் தெரிவதால் அது குறித்தும் கிழித்து தொங்கவிடுவார் என தெரிகிறது. மேலும் கமல் அரசியல் என எதை குறிப்பிடுகிறார் என்றும் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாய் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X