மாஸ்க்கையும் பேட்ஜையும் கொடுத்து பற்ற வைத்த கமல்.. கண்கலங்கிய ரியோ.. வச்சு செய்த ஹவுஸ்மேட்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் மாஸ்க் மற்றும் பேட்ஜ் டாஸ்க்கை கொடுத்து பிக்பாஸ் வீட்டில் கொளுத்தி போட்டுள்ளார் கமல்.

வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடிகர் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்து வருகிறார்.

சனிக்கிழமையான நேற்று ஹவுஸ் மேட்ஸ்களை சந்தித்த கமல், கடந்த வாரம் முழுக்க நடந்த சம்பவங்கள் குறித்து விவாதித்தார்.

கமல் கொடுத்த டாஸ்க்

கமல் கொடுத்த டாஸ்க்

இன்று சோஷியல் டிஸ்டன்சிங் குறித்து பேசிய கமல், தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ்களிடம் பேசினார். அப்போது பிக்பாஸ் வீட்டில் யாரெல்லாம் மாஸ்க் போட்டிருப்பதாக நினைக்கிறீர்களோ அவர்களுக்கு மாஸ்க்கும் யார் ஓபனாக இருப்பதாக நினைக்கிறீர்களோ அவர்களுக்கு பேட்ஜும் கொடுக்க சொன்னார்.

வழக்கம் போல் ரியோ

வழக்கம் போல் ரியோ

அதற்கா மாஸ்க்கும் பேட்ஜூம் ஸ்டோர் ரூமில் இருப்பதாக கூறிய கமல் அதனை யாராவது எடுத்து வரும்படி கூறினார். வழக்கம் போல் ரியோவே ஸ்டோர் ரூமூக்கு சென்றார். அவரை தொடர்ந்து ஆரியும் ஸ்டோர் ரூமூக்கு சென்றார்.

ரியோவுக்கு மாஸ்க்

ரியோவுக்கு மாஸ்க்

முதல் ஆளாய் டாஸ்க்கை தொடங்கிய ஆரி, ரியோவுக்கு மாஸ்க்கும் அர்ச்சனாவுக்கு பேட்ஜூம் கொடுத்தார். அவரை தொடர்ந்து ஆஜித், ரியோவுக்கு மாஸ்க்கும் பாலாஜிக்கு பேட்ஜூம் கொடுத்தார்.

அனிதா சம்பத் மாஸ்க்

அனிதா சம்பத் மாஸ்க்

இதேபோல் பெரும்பாலான ஹவுஸ்மேட்ஸ்கள் ரியோ தான் மாஸ்க் போட்டுக் கொண்டு இருப்பதாக கூறியுள்ளனர். குறிப்பாக அவருடன் கூட்டு சேர்ந்து கொண்டு எப்போதும் அவருடனே சுற்றிக் கொண்டிருக்கும் அனிதா சம்பத், ரியோதான் மாஸ்க் போட்டிருப்பதாக கூறி அவருக்கு மாஸ்க்கை கொடுத்தார்.

5 மாஸ்க்குகள்

5 மாஸ்க்குகள்

அனிதா உட்பட யாருமே சுரேஷ் மாஸ்க் போடவில்லை என கூறிய நிலையில் ரியோ மட்டும் சுரேஷுக்கு மாஸ்க் கொடுத்தார். அவரை தொடர்ந்து நடிகர் ஆரிக்கும் ஹவுஸ்மேட்ஸ் அதிக மாஸ்க் கொடுத்தனர். ரியோவுக்கும் ஆரிக்கும் அதிகப்படியாக 5 மாஸ்க்குகளை பெற்றனர். அதிக பேட்ஜ்களை அர்ச்சனா பெற்றார்.

ஆரி வாக்குவாதம்

ஆரி வாக்குவாதம்

ஆனால் ஆரியும் ரியோவும் தங்களுக்கு மாஸ்க் கொடுக்கப்பட்டதில் கொஞ்சமும் நியாயம் இல்லை என பெரும் வாக்குவாதம் செய்தனர். குறிப்பாக ஆரி, தன்னை பற்றி தெரியாமலே தனக்கு மாஸ்க் போட்டுவிட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

கலங்கிய ரியோ

கலங்கிய ரியோ

ரியோ, நானே என்னுடைய மாஸ்க்கை கழட்டி விட்டேன், அதையே எடுத்து எனக்கு மாட்டி விட்டுள்ளார்கள். எனக்கு மாஸ்க் போட்டுவிட்டதில் கொஞ்சமும் நியாயமில்லை என கூறினார். முன்னதாக அடுத்தடுத்து மாஸ்க்கள் மாட்டப்பட்ட போது கண்கலங்கினார் ரியோ.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X