“வேட்டையாடு விளையாடு 2க்கு எப்பவோ ரெடி, அவர் தான் வரவில்லை”: கலகலப்பான கமல், கெளதம் மேனன் நச் பதில்

சென்னை: கமல் நடிப்பில் 2006ல் வெளியான வேட்டையாடு விளையாடு படம் சூப்பர் ஹிட் அடித்தது.

கெளதம் மேனன் இயக்கியிருந்த இந்தப் படத்தில் கமல் போலீஸ் ஆபிஸராக நடித்திருந்தார்.

இந்நிலையில், வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகம் குறித்து சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.

கெளதம் மேனனின் ஃபேன்பாய் சம்பவம்

கெளதம் மேனனின் ஃபேன்பாய் சம்பவம்

மின்னலே மூலம் இயக்குநராக என்ட்ரி கொடுத்த கெளதம் மேனன், தமிழில் தனது 3வது படத்திலேயே கமலுடன் கூட்டணி வைத்தார். 'வேட்டையாடு விளையாடு' என்ற டைட்டிலில் வெளியான இந்தப் படம், தரமான ஃபேன் பாய் சம்பவமாக அமைந்தது. கமலின் ஆக்சன் சீன்கள் அவரது ரசிகர்களை நிஜமாகவே வெறித்தனமாக வேட்டையாடியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு கமல் போலீஸ் ஆபிஸர் கேரக்டரில் நடித்திருந்ததோடு, கெளதம் மேனனின் மேக்கிங்கும் சேர்ந்து வேட்டையாடு விளையாடு படத்தை ப்ளாக் பஸ்டர் ஹிட் லிஸ்டில் இணைத்தது.

கமலின் ஆக்சன், காதல், ரொமான்ஸ்

கமலின் ஆக்சன், காதல், ரொமான்ஸ்

ராகவன் ஐபிஎஸ் என்ற போலீஸ் ஆபிஸர் கேரக்டரில் நடித்திருந்த கமல், ஆக்சனில் மட்டும் மிரட்டவில்லை எனலாம். கொஞ்சம் இதமான காதல், விரசம் இல்லாத ரொமான்ஸ் என வெரைட்டியாக கலக்கியிருப்பார். கமலுக்கு ஸ்டைலிஷான லுக் கொடுத்து, ஸ்க்ரீனில் அவரை ரசிகர்கள் பார்த்து ரசிக்க ரொம்பவே மெனக்கெடல் செய்திருப்பார் கெளதம் மேனன். அதனால், கமல் - கெளதம் கூட்டணிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

வேட்டையாடு விளையாடு 2 அப்டேட்

வேட்டையாடு விளையாடு 2 அப்டேட்

இந்நிலையில், கடந்த சில வருடங்களாகவே ஹிட் படங்களின் 2ம் பாகம் வெளியாகி வருகிறது. அதேபோல், வேட்டையாடு விளையாடு படத்தின் 2ம் பாகமும் விரைவில் வர வேண்டும் என கமலின் ரசிகர்கள் கூறி வந்தனர். கெளதம் மேனனும் தனக்கு அந்த ஐடியா இருப்பதாக சொல்லி வந்தார். இந்நிலையில், தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ, ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது வேட்டையாடு விளையாடு 2 படம் பற்றியும் அப்டேட் வெளியானது.

நான் எப்பவோ ரெடி, கமல் கலகல

நான் எப்பவோ ரெடி, கமல் கலகல

கெளதம் மேனன் இயக்கியுள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்தின் ஆடியோ, ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் கமல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது கமலிடம் 'வேட்டையாடு விளையாடு 2' குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நான் எப்பவோ ரெடி, கெளதம் மேனன் தான் இதோ வருகிறேன்னு சொல்லிட்டுப் போனார். ஆனால், இன்று வரை இரண்டாம் பாகத்தின் ஸ்கிரிப்ட்டை கொண்டு வரவில்லை" என்றார். அதற்கு உடனே பதிலளித்த கெளதம் மேனன், "உங்களுக்கு மிகவும் பிடித்த. ஜெயமோகன் எழுதிகொண்டு இருக்கிறார். விரைவில் ஸ்கிரிப்ட்டுடன் வருகிறேன். கண்டிப்பாக வேட்டையாடு விளையாடு 2ம் பாகம் வரும்" என தெரிவித்தார். இதனால் கமலின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X