விஷால் மீதான குற்றச்சாட்டுகள்: கமல் சொல்லிட்டார், அவர் ஒத்துக்குவாரா?
சென்னை: தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் மீதான குற்றச்சாட்டுகளை ஆராய அதற்கு இடம் கொடுக்கும் மனப்பான்மை அவருக்கு இருக்கும் என்று நம்புவதாக கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், யாரையும் மதிப்பது இல்லை என்றும், முந்தைய நிர்வாகம் வைத்திருந்த வைப்பு நிதி ரூ. 7 கோடியை செலவு செய்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக சில தயாரிப்பாளர்கள் சேர்ந்து தயாரிப்பாளர்கள் சங்க கட்டிடங்களுக்கு பூட்டு போட்டனர். அந்த பூட்டை உடைக்க முயன்ற விஷால் கைது செய்யப்பட்டார்.
விஷால் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து கமல் ஹாஸனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்,
விஷால் மீதான குற்றச்சாட்டு என்ன என்பதை ஆராய வேண்டும் என்றால், அதற்கு இடம் கொடுக்கும் மனப்பான்மை அவருக்கு இருக்கும் என நம்புகிறேன் என்றார்.
கமல் ஹாஸன் சொல்லிவிட்டார், விஷால் ஒப்புக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











