»   »  நடிகர் கமல்ஹாசன் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்தார்... அப்பல்லோவில் அறுவை சிகிச்சை

நடிகர் கமல்ஹாசன் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்தார்... அப்பல்லோவில் அறுவை சிகிச்சை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமல்ஹாசன் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததைத் தொடர்ந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னர் கமல்ஹாசன் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவில் முகாமிட்டு சபாஷ்நாயுடு படத்தின் படப்பிடிப்படை நடத்திக் கொண்டிருந்தார் கமல்ஹாசன். இப்படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடந்த வாரம் கமல்ஹாசன் நாடு திரும்பினார்.

Kamal hassan admits in Apollo hospital

இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தின் மாடிப்படியில் இருந்து நேற்று நள்ளிரவு கமல்ஹாசன் தவறி விழுந்தார். இதில் அவரது முதுகு தண்டுவடம் மற்றும் கால் எலும்பு முறிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு கமல்ஹாசனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னர் கமல்ஹாசன் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

English summary
Actor Kamal hassan slipped and fell in the stairs at his office.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil