இறுதிக்கட்டத்தில் இந்தியன் 2... வினோத்துடன் இணையும் கமல்... படப்பிடிப்புக்கு ரெடியான KH 233 டீம்!

சென்னை: கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் தொடர்ச்சியாக கமல்ஹாசன் அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களில் நடிக்கவுள்ளார்.

மணிரத்னம் இயக்கும் KH 234, வினோத்துடன் KH 233 ஆகிய படங்களில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 இறுதிக்கட்டத்தில் இந்தியன் 2

இறுதிக்கட்டத்தில் இந்தியன் 2

கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 ஷூட்டிங் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில், கமல்ஹாசனுடன் ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்கள் நடித்த சண்டைக் காட்சி உட்பட மேலும் பல சீன்கள் படமாக்கப்பட்டன. மேலும், இந்தியன் 2 படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து கமல் தனது அடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறாராம்

 அடுத்து KH 233

அடுத்து KH 233

இந்தியன் 2 திரைப்படம் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள KH 234 திரைப்படம் குறித்து கடந்தாண்டு நவம்பரில் அபிஸியல் அப்டேட் வெளியானது. ஆனால், அதற்கு முன்பாக கமலின் 233வது படத்தின் இயக்குநர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டது. இதுபற்றி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், அ வினோத் தான் அந்த இயக்குநர் என சொல்லப்படுகிறது.

 விரைவில் படப்பிடிப்பு

விரைவில் படப்பிடிப்பு

கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் KH 234 அடுத்தாண்டு வெளியாகும் என படக்குழு அறிவித்துவிட்டது. மணிரத்னமும் தற்போது பொன்னியின் செல்வன் 2 ரிலீஸுக்குப் பின்னர் தான், KH 234 திரைக்கதையை முடிக்கவுள்ளாராம். அதனால் அதற்கு முன்பாக அ வினோத் இயக்கும் படத்தில் நடிக்க கமல் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, இந்தப் படத்தின் ஷூட்டிங் வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 காத்திருக்கும் அ வினோத்

காத்திருக்கும் அ வினோத்

முதல் படமான சதுரங்க வேட்டை மூலம் கவனம் ஈர்த்த அ வினோத், அடுத்து கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் கொடுத்து சூப்பர் ஹிட்டால், அஜித்துடன் இணைந்த அவர் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இதில் கடந்த ஜனவரியில் வெளியான துணிவு சூப்பர் ஹிட்டானது. இதனையடுத்து கமலுக்காக ஸ்கிரிப்ட்டுடன் காத்திருந்த அ வினோத், தற்போது ஷூட்டிங் செல்லவும் ரெடியாகிவிட்டாராம்.

 விரைவில் அபிஸியல் அப்டேட்

விரைவில் அபிஸியல் அப்டேட்

இந்தியன் 2 ஷூட்டிங் மே மாதத்திற்குள் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது. அப்போது கமல் - வினோத் இணையும் KH 233 படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும், இந்தாண்டு அக்டோபர் மாதம் முன்பாக ஷூட்டிங்கை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதனால் KH 233 அப்டேட்டுக்காக கமல் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X