கமல் பர்த்டே.. இந்திய சினிமாவின் பெருமை.. ட்விட்டரை தெறிக்கவிடும் ஃபேன்ஸ்.. டைட்டிலுக்கு வெயிட்டிங்
சென்னை: கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் இன்று மாலை வெளியாகிறது.
உலகநாயகன் கமல்ஹாசனின் 66 வது பிறந்தநாள் கோலாகலமாக இன்று கொண்டாடப்படுகிறது.
அவர் ரசிகர்களும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்களும் இதை அமர்க்களமாகக் கொண்டாடி வருகின்றனர்

கம்பீரமாக கமல்
அவர் பிறந்த நாளை முன்னிட்டு காமன் டிபியை 'மாஸ்டர்' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜும் ஸ்ருதி ஹாசனும் சில நாட்களுக்கு முன் சோசியல் மீடியாவில் வெளியிட்டனர். ராஜா லுக்கில் கம்பீரமாக கமல் மிரட்டும் அந்த பிறந்தநாள் காமன் டிபி, வேற லெவலில் டிரெண்டானது.

ரசிகர்கள் டிரெண்ட்
கவச உடைகளை அணிந்து கொண்டு, ஸ்டைலாகவும் கம்பீரமாகவும் தோற்றமளிக்கும் அந்த காமன் டிபி வெளியிடப்பட்டதை அடுத்து, #LeaderBirthdayCDP மற்றும் #HappyBirthdayLeader என்ற ஹேஷ்டேக்குகளை கமல்ஹாசன் ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர்.

கமலுடன் கைகோர்க்கிறார்
விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கி உள்ள லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக கமல்ஹாசன் நடிப்பில் உருவாக உள்ள படத்தின் வேலைகளை செய்து வருகிறார். மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தனது நான்காவது படத்தில் கமல்ஹாசனுடன் கைகோர்க்கிறார்.

இன்று மாலை டைட்டில்
அந்தப் படத்தின், டைட்டில், எவனென்று நினைத்தாய் என முதலில் கூறப்பட்டது. ஆனால், அது டைட்டில் இல்லை என்றும் அது விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. அதன்படி, கமல்ஹாசன் பிறந்த நாளான இன்று மாலை 5 மணிக்கு படத்தின் டைட்டில் வெளியிடப்படுகிறது. இது அவர் நடிக்கும் 232 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

குவியும் வாழ்த்து
இதற்கிடையே ரசிகர்கள், #HappyBirthdayKamalHaasan மற்றும் #HBDKamalHaasan என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். இந்த ஹேஷ்டேக்கில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். பல சினிமா பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











