Manobala Kamal: கமல் கை தூக்கிவிட்ட மனோபாலா... பிரிந்த நண்பர்கள்... ஆனாலும் விட்டுப் போகாத நட்பு

சென்னை: நடிகரும் இயக்குநருமான மனோபாலா உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 69.

மனோபாலாவின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து டிவிட் செய்துள்ளார்.

மனோபாலாவை பாரதிராஜாவிடம் அறிமுகப்படுத்தி வைத்ததே கமல்ஹாசன் தான்.

நெருங்கிய நண்பர்களாக இருந்த கமல்ஹாசனும் மனோ பாலாவும் ஒரு பிரச்சினையில் எதிரும் புதிருமாக சண்டையிட்டு பிரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

 Kamal Hassan condoles the death of actor Manobala on Twitter

மனோபாலா - கமல்ஹாசன் நட்பு
1979ம் ஆண்டு ரிலீஸான பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் திரைப்படத்தில் மனோபாலா உதவி இயக்குநராக பணிபுரிந்திருந்தார். மனோபாலாவுக்கு சினிமா மீது இருந்த ஆர்வத்தைப் பார்த்து கமல்ஹாசன் தான் அவரை பாரதிராஜாவிடம் அறிமுகப்படுத்தினார். அதனால் தான் பாரதிராஜாவும் மனோபாலாவை தனது அணியில் இணைத்துக் கொண்டார்.

அப்போது முதலே கமல்ஹாசனும் மனோபாலாவும் நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில், இன்று உடல் நலக்குறைவால் காலமான மனோபாலாவுக்கு கமல் இரங்கல் தெரிவித்து டிவிட் செய்துள்ளார். அதில், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோ பாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. சினிமாவின் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்திலும் மனோபாலா நடித்து வந்தார். முன்னதாக நெருங்கிய நண்பர்களாக இருந்த இவர்கள் இருவரும், ஒரு பிரச்சினையால் தங்களது நட்பை முறித்துக்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் சங்கம் விவகாரத்தில் கமல்ஹாசனுக்கும் மனோபாலாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடபெற்றதாகவும் சொல்லப்படுகிறது.

அதன்பிறகு இருவரும் பேசிக்கொள்வதே இல்லையாம். ஆனால், ஒருகட்டத்தில் தங்கள் நட்பை முறித்துக்கொள்ள விரும்பாத இருவரும் மனம்விட்டு பேசிக்கொண்டார்களாம். அதனையடுத்து தான் இந்தியன் 2 படத்திலும் மனோபாலாவை கமிட் செய்துள்ளார் ஷங்கர். இந்நிலையில், தற்போது உயிரிழந்த மனோபாலாவுக்கு கமலின் இந்தியன் 2 தான் கடைசிப் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

 Kamal Hassan condoles the death of actor Manobala on Twitter

மனோபாலாவின் ஆரம்பகாலத்தில் அவரைப் பற்றி சரியாக புரிந்துகொண்ட கமல், பாராதிராஜாவிடம் அறிமுகப்படுத்தினார். அப்படி தனது கேரியரை தொடங்கிய மனோபாலா பின்னாளில் வெற்றிகரமான இயக்குநர், காமெடி நடிகர் என ஆல் இன் ஆல் அழகுராஜாவாக வலம் வந்தார். இந்நிலையில் மனோபாலாவுக்கு கமல் இரங்கல் தெரிவித்துள்ள டிவிட்டர் பதிவு வைரலகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X