கிருஷ்ணாவுக்கு என்ன ஆச்சு? திரும்ப திரும்ப கேட்ட கமல்.. மரணத்தை அறிந்து மருத்துவமனையிலேயே கதறல்!

Recommended Video

Indian 2 Shooting Spot Incident detailed | EVP Film City | Director Shankar | Kamal Hassan

சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா மரணமடைந்த தகவலை கேட்டு கதறி அழுதிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

சென்னை பூந்தமல்லி அருகே நசரத் பேட்டையில் இந்தியன் 2 படத்தின் ஷுட்டிங் நடைபெற்று வருகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

நேற்றிரவு படத்தின் சண்டைக்காட்சிகள் ஷுட் செய்யப்பட்டது. 9.30 மணிக்கு பிரேக் விடப்பட்டு லைட்டுகளை செட் செய்யும் பணி நடைபெற்றது.

3 பேர் பலி

3 பேர் பலி

அப்போது எதிர்பாராத விதமாக படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட மிக உயரமான கிரேன் கீழே சரிந்து விழுந்தது. இதில் கிரேனுக்கு அடியில் சிக்கி உதவி இயக்குநர் கிருஷ்ணா, புரெடெக்ஷன் உதவியாளர் மது, ஆர்ட் உதவியாளர் சந்திரன் ஆகியோர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர்.

மதராசப்பட்டினம்

மதராசப்பட்டினம்

இந்நிலையில் உயிரிழந்த உதவி இயக்குநர் கிருஷ்ணா, பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் இரண்டாவது மருமகன் என தெரிய வந்துள்ளது. தனது மனைவி அமிதாவுடன் இணைந்து ஏராளமான விளம்பர படங்களை இயக்கியிருக்கிறார் கிருஷ்ணா. மதராசப்பட்டினம் படத்தின் போது இயக்குநர் ஏஎல் விஜயிடமும் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார்.

மிகவும் நெருக்கமாக

மிகவும் நெருக்கமாக

கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் இந்தியன் 2 படத்திற்காக இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக சேர்ந்துள்ளார்.

இயக்குநர் ஷங்கருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் ஏற்கனவே பரிட்சயமானவராக இருந்த கிருஷ்ணா இந்த படத்தின் மூலம் மிகவும் நெருக்கமாகி இருக்கிறார்.
கிருஷ்ணாவுக்கு என்னாச்சு?

கிருஷ்ணாவுக்கு என்னாச்சு?

நேற்றிரவு விபத்து நடந்ததை தொடர்ந்து காயம் அடைந்தவர்கள் தண்டலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து நடிகர் கமல் ஹாசன் மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு அனுமதிக்கப்பட்ட ஊழியர்களை நலம் விசாரித்தார் கமல். அப்போது, கிருஷ்ணாவுக்கு என்ன ஆச்சு என்ன ஆச்சு என திருப்பி திருப்பிக் கேட்டுள்ளார் கமல்.

கதறி அழுத கமல்

கதறி அழுத கமல்

இதைத்தொடர்ந்து கிருஷ்ணா மரணமடைந்துவிட்டதாக கூறியுள்ளனர், உடனிருந்தவர்கள். இதனைக் கேட்ட கமல் மருத்துவமனையிலேயே கதறி அழுதிருக்கிறார். ஏற்கனவே மதன் குடும்பத்திற்கு இயக்குநர் ஷங்கரும் நடிகர் கமலும் நெருக்கமானவர்கள். தொழில் மட்டுமின்றி இதன் மூலம் நெருக்கமாகியிருக்கிறார் கிருஷ்ணா.

என்ன பதில்?

என்ன பதில்?

2 நாட்களுக்கு முன்பு இந்தியன் 2வில் இணைந்த கிருஷ்ணா திடீரென மரணமடைந்தது ஷங்கரையும் கமல்ஹாசனையும் தனிப்பட்ட முறையிலும் உலுக்கியிருக்கிறது. மதனின் மகளுக்கும் அவரது குடும்பத்திற்கும் என்ன பதில் சொல்ல போகிறோம் என கதறியிருக்கின்றனர் கமலும் ஷங்கரும்..!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X