»   »  போத்தீஸ் விளம்பரத்தில் வந்த பணத்தை மொத்தமாக எய்ட்ஸ் நோயாளிகளுக்குத் தந்த கமல்!

போத்தீஸ் விளம்பரத்தில் வந்த பணத்தை மொத்தமாக எய்ட்ஸ் நோயாளிகளுக்குத் தந்த கமல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

போத்தீஸ் விளம்பரத்தில் நடித்ததால் கிடைத்த சம்பளத் தொகை ரூ.16 கோடியை நடிகர் கமலஹாசன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலனுக்காக வழங்கியுள்ளார்.

இதுவரை தனியார் நிறுவனங்களுக்காக எந்த விளம்பரத்திலும் நடிக்காமலிருந்தார் கமலஹாசன். வரும் தீபாவளி பண்டிகைக்காக போத்தீஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ளார். 2 நிமிடம் மட்டுமே திரையிடப்படக் கூடிய வகையில் சில விளம்பரப் படங்கள் தயாராகியுள்ளன.

Kamal Hassan donates Rs 16 cr to HIV affected children

இந்த விளம்பரங்களில் நடிக்க கமலஹாசன் ரூ.16 கோடி சம்பளமாகப் பெற்றுள்ளார்.

இந்த சம்பளம் முழுவதையும் அப்படியே ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்கு வழங்கியுள்ளார். ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான அனைத்து பணிகளையும் செய்து வரும் 'பெற்றால்தான் பிள்ளையா?' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் அந்த தொகை முழுவதும் வழங்கப்பட்டுள்ளது.

Kamal Hassan donates Rs 16 cr to HIV affected children

சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் கமலஹாசன் ஒரு பேட்டியின் போது, தான் என்றாவது விளம்பர படங்களில் நடிக்க நேர்ந்தால், அதில் கிடைக்கும் வருவாயை ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக செலவழிப்பேன் என்று கூறியிருந்தது குறிப்படத்தக்கது.

தான் சொன்ன வாக்கைக் காக்கும் வகையில் இப்போது ரூ 16 கோடியைத் தந்துள்ளார் கமல்.

English summary
Kamal Hassan has donated his first commercial ad payment Rs 16 cr for AIDS affected children care.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil