»   »  ரூ 1 லட்சம் பரிசு... மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு மரியாதை செய்த கமல்ஹாசன்!

ரூ 1 லட்சம் பரிசு... மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு மரியாதை செய்த கமல்ஹாசன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மூத்த எழுத்தாளர் கி ராஜநாராயணனை நேரில் சந்தித்து அவருக்கு மரியாதை செய்தார் நடிகர் கமல் ஹாஸன்.

நடிகர் கமல்ஹாசனுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் உள்ள தொடர்பு அறிந்ததே. எழுத்தாளர்களை மதிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களைத் தேடிச் சென்று, நெருங்கிப் பழகி வருபவர். எப்போதும் தன்னைச் சுற்றி எழுத்தாளர்களும் கவிஞர்களும் இருக்குமாறு பார்த்துக் கொள்வார் கமல் ஹாஸன்.

Kamal Hassan honours veteran writer Ki Rajanarayanan

ஒவ்வொரு வருடமும் தனது பிறந்த நாளின் போது எழுத்தாளர்களுக்கு பரிசளித்து, அவர்களுக்கு மரியாதை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த வருடம் தனது 61 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, புதுவையில் வசிக்கும் மூத்த எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கி. ராஜநாராயணனை நேரில் சந்தித்து ஒரு லட்சம் ரூபாய் வழங்கி அவரை கௌரவித்தார்.

Kamal Hassan honours veteran writer Ki Rajanarayanan

இந்த சந்திப்பின் போது ‘தூங்காவனம்' திரைப்படத்தின் வசனகர்த்தா சுகாவும் உடன் இருந்தார்.

English summary
Kamal Hassan has honoured veteran writer Ki Rajanarayanan with a cash prize of Rs 1 lakh.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil