twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆன்மீகவாதிகள், சமூக சேவையாளர்களுடன் கமல் சந்திப்பு தொடர்கிறது

    |

    நெல்லை: சினிமா படப்பிடிப்புக்கு இடையே ஆன்மீகம் மற்றும் சமூக சேவையாளர்களை சந்தித்துஅவர்களுடன் உரையாற்றி வருகிறார் நடிகர் கமல் ஹாசன்.

    மலையாளத்தில் மோகன்லால், மீனா ஆகியோர் நடிப்பில் வெளியான "திரிஷ்யம்' திரைப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் எடுக்கப்பட்டு வருகிறது. கமல் ஹாசன் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப்படத்தை நடிகை ஸ்ரீபிரியா தயாரிக்கிறார்.

    நெல்லை மாவட்டத்தில் ஷூட்டிங்

    நெல்லை மாவட்டத்தில் ஷூட்டிங்

    பாபநாசம் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக நெல்லை மாவட்டத்தின் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மேக்கரை, குற்றாலம், ஆயிரப்பேரி, கொடிக் குறிச்சி, இலத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் நடந்துவருகிறது.

    நாங்குநேரி ஜீயருடன் சந்திப்பு

    நாங்குநேரி ஜீயருடன் சந்திப்பு

    சில தினங்களுக்கு முன்பு நாங்குநேரி தோத்தாத்ரிநாதர் வைணவ ஆலயத்தில் ஒரு சில காட்சிகளை படமாக்கிய கமல் ஹாசன், நாங்குநேரி ஜீயரையும் சந்தித்து பேசினார்.

    வைணவ மடத்திற்குள் நுழையும்போது மேல்சட்டை அணியாமல் செல்லவேண்டும் என்ற விதிமுறைகளை கடைபிடிக்காமல், சட்டையணிந்து சென்றார் என்று கமல் மீது குற்றச்சாட்டும் எழுந்தது.

    ராமகிருஷ்ணனுடன் சந்திப்பு

    ராமகிருஷ்ணனுடன் சந்திப்பு

    கமல்ஹாசன் எப்போது நெல்லை வந்தாலும், தமிழ்த் தொன்மை ஆய்வாளரும், பேராசிரியருமான தொ.பரமசிவனை அவரது வீட்டுக்குசென்று சந்திப்பார். இப்போதும் அவ்வாறே செய்தார். தொன்மை

    தமிழர்கள் வாழ்ந்த பூமி என்பதாலோ என்னவோ நெல்லை மண் மீது கமலுக்கு பிரியம் அதிகம்.சினிமா படப்பிடிப்பிற்கு இடையே நெல்லை மண்ணின் மைந்தர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ள

    அவர், தென்காசி அருகேயுள்ள ஆய்க்குடி அமர்சேவா சங்க தலைவர் ராமகிருஷ்ணனையும் சில தினங்களுக்கு முன் சந்தித்தார்.

    ராமகிருஷ்ணரின் சேவைகள்

    ராமகிருஷ்ணரின் சேவைகள்

    ஆய்க்குடி அமர்சேவா சங்க தலைவர் ராமகிருஷ்ணன், 1975ல் கோவை இன்ஜினியரிங் கல்லூரியில் பயின்றவர். கடற்படை அதிகாரிக்கான உடற்தேர்வுக்காக மரத்தில் இருந்து குதித்தபோது முதுகு

    தண்டு பாதிக்கப்பட்டவர். பின்னர் சக்கர நாற்காலியே வாழ்க்கையாகி போனாலும் போலியோ உள்ளிட்ட பாதிப்புகளால் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஏராளமான குழந்தைகளுக்கு

    கல்வி,வேலைவாய்ப்பு,தொழிற்கல்வி உள்ளிட்ட பல்வேறு சமூக முன்னேற்ற கல்வியை போதித்துவருபவர்.

    குழந்தைகளுடன் சந்திக்க திட்டம்

    குழந்தைகளுடன் சந்திக்க திட்டம்

    ராமகிருஷ்ணனை தென்காசியில் சந்தித்த கமல் ஹாசன், அமர்சேவா சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் அங்கு பயிலும் குழந்தைகள் குறித்தும் கேட்டறிந்துள்ளார். ஆய்க்குடியில் உள்ள

    அமர்சேவா மையத்தில் உள்ள குழந்தைகளை சந்திக்க வருவதாகவும் கூறியுள்ளார்.

    English summary
    Kamal hassan met with Ramakrishnan who is a social activist in Tirunelveli district.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X