ஏஆர் ரஹ்மானை சந்தித்த கமல்.. வைரலாகும் போட்டோ.. ஏன் தெரியுமா?!

Recommended Video

Actor Kamal Hassan New Movie : ஏஆர் ரஹ்மானை சந்தித்த கமல்,வைரலாகும் போட்டோ

சென்னை: நடிகர் கமல்ஹாசனும் ஏஆர் ரஹ்மானும் ஒன்றாக சந்தித்திருக்கும் போட்டோ வைரலாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் அரசியல், சினிமா என படு பிஸியாக உள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியையும் நடிகர் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

சமீபத்தில் இந்தியன் பார்ட் 2 படத்திற்கு பிறகு நடிக்கப்போவதில்லை என அறிவித்திருந்தார் கமல்ஹாசன். இந்நிலையில் அரசியலை மையமாக வைத்து அறிவிக்கப்பட்ட தலைவன் இருக்கின்றான் படத்தை மீண்டும் உருவாக்க கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார்.

கிணற்றில் போட்ட கல்

கிணற்றில் போட்ட கல்

இந்த படத்தின் அறிவிப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. ஆனால் அதன்பிறகு அதுகுறித்த பேச்சே இல்லை. கிணற்றில் போட்ட கல்லு போல இருந்தது அந்த விஷயம் .

தலைவன் இருக்கின்றான்

தலைவன் இருக்கின்றான்

இந்நிலையில் அந்த படத்திற்கான பணிகளை தொடங்கியுள்ளார் கமல். தற்போது அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்டு வரும் கமல், இப்போது தலைவன் இருக்கின்றான் படத்தை தொடங்கினால் உதவியாக இருக்கும் என எண்ணுகிறார் போலும்.

ஒன் அன்ட் ஒன்லி

தலைவன் இருக்கின்றான் படத்திற்காக ஏஆர் ரஹ்மானை சந்தித்துள்ளார் கமல்ஹாசன். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் ஒன் அண்ட் ஒன்லி கமல்ஹாசனுடன் மீண்டும் இணைந்து மகத்தான பணியாற்றுவதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

கமலும் உறுதி

கமலும் உறுதி

மேலும் இதுதொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்திய போட்டோவையும் ஏஆர் ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தெனாலியில் கூட்டணி

தெனாலியில் கூட்டணி

நடிகர் கமல்ஹாசனும் ஏஆர் ரஹ்மானும் சுமார் 19 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி அமைக்கின்றனர். 2000ஆம் ஆண்டில் வெளிவந்த தெனாலி படத்தில் இருவரும் கூட்டு சேர்ந்தனர். அதன்பிறகு தற்போது தான் இருவரும் இணைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X