பணத்துக்காக தன்மானத்தை வித்துடாதீங்க! - தேர்தல் ஆணைய பிரச்சார படத்தில் கமல் ஹாஸன்

By Shankar

சென்னை: வேட்பாளர் கொடுக்கிற சிறிய தொகைக்காக உங்கள் தன்மானத்தை வித்துடாதீங்க என்று கமல்ஹாஸன் வீடியோ பிரச்சாரத்தில் கூறியுள்ளார்.

ஓட்டுக்கு பணம் என்பது இன்றைய தேர்தல்களில் சகஜமாகிவிட்டது. இந்த முறை அதை முறியடிக்க இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது.

இதுதொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, குறும்பட சி.டி. ஒன்றையும் தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது.

கமல்ஹாஸன்

கமல்ஹாஸன்

இதில் நடிகர் கமலஹாசன், தோன்றி விழிப்புணர்வு பிரசாரம் செய்துள்ளார். இதற்கான வீடியோ சி.டி. நேற்று வெளியிடப்பட்டது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் இதனை வெளியிட்டார். 25 வினாடிகள் ஓடக்கூடிய இந்த சி.டி.யில், நடிகர் கமலஹாசன் வாக்காளர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்:

கடமை

கடமை

"நாட்டுக்கு நாம் செய்யவேண்டிய கடமைகளில் மிகவும் முக்கியமானது வாக்களிப்பதாகும். வேட்பாளர்களின் தகுதிகளை உணர்ந்து சுயசிந்தனையுடன் ஓட்டுப்போடுவதே வாக்களிப்பதாகும்.

பணம்

பணம்

இந்த வேட்பாளர் எத்தனை பணம் கொடுத்தார். அந்த வேட்பாளர் எத்தனை பணம் கொடுத்தார் என எண்ணி வாக்களிக்காதீர்கள்.

சிந்தித்து...

சிந்தித்து...

நாம் நமது எதிர்காலத்தை எந்த வேட்பாளரின் கையில் ஒப்படைக்கப்போகிறோம் என சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

சிறிய தொகைக்காக

சிறிய தொகைக்காக

ஒரு சிறிய தொகைக்காக தன்மானத்தையும், எதிர்காலத்தையும் விற்றுவிடாதீர்கள். ஜனநாயகம் தழைக்க சிந்தித்து மனசாட்சிப்படி வாக்களிப்போம்.

எந்த சூழ்நிலையிலும் வாக்கினை விற்கமாட்டோம் என்று உறுதி ஏற்போம்."

-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Read more about: kamal கமல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X