twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமல் என்ன பேசினாலும் அரசியலாவே தெரியுதே.. நமக்கு மட்டும் தானா?

    |

    Recommended Video

    Bigg Boss 3 Tamil:Promo 2:ஆசைப்பட்டு கேட்ட குறும் படம்

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கும் புரமோ வெளியாகியுள்ளது. அதில் கமல் பேசும் பேச்சு அப்படியே அரசியல் களத்தை அளப்பதாக உள்ளது.

    பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்து வருகிறார். கமல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது கிடைக்கும் கேப்பில் எல்லாம் அரசியல் பேசி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியை தனது அரசியலுக்கு நன்றாகவே பயன்படுத்தி வருகிறார் கமல்ஹாசன். அதுவும் அவர், மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய பின்னர் சொல்லவே வேண்டாம், கிடைக்கும் வாய்ப்பில் உலக அரசியல் வரை பேசி சிக்ஸர் அடித்து வருகிறார் மனுஷர்.

    அணி மாறுவது சகஜம்

    அணி மாறுவது சகஜம்

    இந்நிலையில் இன்றைய புரமோவிலும் பிச்சு உதறியிருக்கிறார் கமல்ஹாசன். அவர் புரமோவில் பேசியிருப்பதாவது, மாத்தி மாத்தி பேசுறது, அணி மாறுவது இதெல்லாம் இப்போ இந்த வீட்டுக்கு சகஜமாயிடுச்சு.

    நினைத்தாலே இனிக்கும்

    நினைத்தாலே இனிக்கும்

    ஆனா இதுல எனக்கு பிடிச்ச விஷயம் என்னன்னா இது எல்லாமே பதவி மோகத்துக்காக இல்ல. ஒரு விதமான மோகம், தமிழ்ல சொல்லனும்னா ஃபீலிங்ஸ் என்ற அவர் நினைத்தாலே இனிக்கும் என பேன்ட் பாக்கெட்டில் இருந்து சாக்லேட்டை எடுத்து காட்டுகிறார்.

    எந்த மாநில அரசியல்?

    எந்த மாநில அரசியல்?

    சாக்லேட் விவகாரம் பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்றாலும், அதற்கு முன்னதாக பேசியது எல்லாமே முழுக்க முழுக்க அரசியல்தான். ஆனால் அதுதமிழக அரசியலா அல்லது கர்நாடக அரசியலா என்ற குழப்பம் உள்ளது.

    அணி மாறுவது

    அணி மாறுவது

    குறிப்பாக மாத்தி மாத்தி பேசுறது, அணி மாறுவது இதெல்லாம் இப்போ இந்த வீட்டுக்கு சகஜமாயிடுச்சு என்று கூறியது. தமிழக அரசியலிலும் அணிமாற்றம் நடக்கிறது, தலைவர்களும் மாறி மாறி பேசி வருகின்றனர். இதேபோல் கர்நாடக அரசியலிலும் பல குழப்பங்கள் அரங்கேறி வருகிறது.

    நமக்கு மட்டும் தானா?

    நமக்கு மட்டும் தானா?

    கமல் பேசியது இவற்றை குறி வைத்தா அல்லது உண்மையிலேயே பிக்பாஸ் பற்றிதானா என்று யோசிக்க தோன்றுகிறது. கமல் அரசியலுக்கு வந்த பிறகு அவர் பேசும் ஒவ்வோரு பேச்சும் அரசியலாகவே தெரிகிறது.. இது நமக்கு மட்டும் தானா..!?

    English summary
    Kamal hassan talking politics in Biggboss promo.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X