எதிர்காத்துல எச்சில் மொழியாதே.. செம நோஸ்கட் கொடுத்த கமல்.. விக்கித்து போன பாலாஜி!
சென்னை: சனம் வேலையை பார்த்த பாலாஜிக்கு நடிகர் கமல்ஹாசன் செம நோஸ்கட் கொடுத்ததால் அவரது முகமே மாறிப்போனது.
பிக்பாஸ் வீட்டில் நேற்றெல்லாம் சனம் ஷெட்டிதான் பேசியதையே பேசி பேசி ஹவுஸ்மேட்ஸ்களை வெறுப்பேற்றினார்.
இன்று அதே வேலையை பிக்பாஸ் வீட்டில் பாலாஜி முருகதாஸ் செய்தார். இதனால் கமலே கடுப்பாகி விட்டார்.

ஹார்ட் பிரேக்
பிக்பாஸ் வீட்டில் இன்றும் கமலின் முன்னிலையில் ஹார்ட் மற்றும் பிரேக்குகளை கொடுக்கும் டாஸ்க் நடைபெற்றது. ஒவ்வொருவரும் தலா இருவருக்கு ஹார்ட்டும் இரண்டு பேருக்கு ஹார்ட் பிரேக்குகளையும் கொடுத்தனர்.

டுபாக்கூர் பிரச்சனை
அந்த வகையில் பாலாஜி முருகதாஸ் ஹார்ட் மற்றும் ஹார்ட் பிரேக்குகளை கொடுத்தார். அப்போது முதலில் சனம் ஷெட்டிக்கு ஹார்ட் பிரேக்கை கொடுத்த பாலாஜி முருகதாஸ், சின்ன பிரச்சனையை சனம் பெருசு படுத்தக்கூடாது என்றும் நேற்று நடந்த டுபாக்கூர் பிரச்சனையையும் காரணமாக கூறினார்.

காற்று வேறப்பக்கம் அடிக்கிறது
தொடர்ந்து சம்யுக்தாவுக்கு ஹார்ட் பிரேக் கொடுத்த பாலாஜி,
அதற்கு காரணமாகவும் பழைய பிரச்சனையையே கூறினார். இதனால் கடுப்பான கமல், திரும்ப திரும்ப அதையே பேசாதீர்கள். காற்று வேறப்பக்கம் அடிக்கிறது என்றார்.

முகத்தில் ஈயாடவில்லை
தொடர்ந்து எதிர்கார்த்துல எச்சில் மொழியாதே என பாடலை பாடியும் பாலாஜிக்கு குட்டு வைத்தார். இதனால் ஒரு செகண்ட் பாலாஜி முருகதாஸின் முகம் ஸ்தம்பித்து போனது. ஈயாடவில்லை. தொடர்ந்து பதிலே சொல்லாமல் ஆஜித் மற்றும் நிஷாவுக்கு ஹார்ட்டுகளை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார் பாலாஜி.


Click it and Unblock the Notifications











