நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கழித்தவர்கள்.. அரசியல் பேசி பாலாஜியை வெளுக்கும் கமல்.. வெளியானது புரமோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன் போட்டியாளர்களை சந்தித்து வருவது வழக்கமான ஒன்று.

அப்படி சந்திக்கும் கமல் வாரம் முழுக்க பிக்பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரிப்பதும் வாடிக்கை.

லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்

லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்

அந்த வகையில் சனிக்கிழமையான இன்று நடிகர் கமல் ஹவுஸ்மேட்ஸ்களை சந்திக்கிறார். இதற்கான முதல் புரமோ வெளியாகி உள்ளது. இந்த வாரம் முழுக்க லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக மணிக்கூண்டு டாஸ்க் நடைபெற்றது.

கடினமான டாஸ்க்

கடினமான டாஸ்க்

இதில் போட்டியாளர்கள் 3 பேர் வீதம் 5 குழுக்களாக பிரிந்து கடிகார முள்ளாய் மாறி, வெயில் மழை, பகல் இரவு என மூன்று மணி நேரத்தை கணிக்க கால் கடுக்க நின்றனர். இந்த சீசனில் இடம்பெற்ற கடினமான டாஸ்க்காக இந்த டாஸ்க் பார்க்கப்படுகிறது.

முதல் புரமோ

முதல் புரமோ


இந்த டாஸ்க்கில் காலத்தை சரியாக கணித்தவர்களை கமல் பாராட்டுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய முதல் புரமோவில் டாஸ்க்கில் சொதப்பிய பாலாஜியை வைத்து கமல் வெளுக்கப்போவது தெரியவந்துள்ளது.

நாட்டை கெடுத்ததுடன்

நாட்டை கெடுத்ததுடன்

புரமோவில் ஆரம்பிக்கும் போதே நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கழித்தவர்கள்.. நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்கள்.. நீங்கள் விழிப்புடன் இருந்தால், மாற்றங்கள் நிகழும்.. உங்கள் ஓட்டு என்னென்ன மாற்றங்களை உருவாக்கப் போகிறது என்று பார்க்கலாம்.. என கூறியுள்ளார்.

கடைசி இடம்

கடைசி இடம்

கமல் பேச பேச பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் நடந்த சம்பவங்கள், பாலாஜி தூங்கும் காட்சி போன்றவை இடம்பெற்றுள்ளன. லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் போது பாலாஜி தூங்கினார். இதனால் அந்த டீம் லக்ஸரி பட்ஜெட்டில் கடைசி இடத்தை பெற்றது.

Recommended Video

பெண்டு நிமிர்த்த தொடங்கிய பிக் பாஸ் | Day 44 | மணிகூண்டு Task
வழக்கம்போல் அரசியல்

வழக்கம்போல் அரசியல்

பாலாஜியை வெளுக்கும் வகையில் கமல் பேசியிருப்பது இந்த புரமோவில் தெரியவந்துள்ளது. இருப்பினும் முதல் புரமோவை பார்த்த ரசிகர்கள் கமல், பாலாஜியை பேசுவது போல், அரசியலையும் வழக்கம்போல் பேசி விட்டார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X