சிரிச்சுகிட்டே சாதிச்சிடுறாங்க.. ரம்யாவை நெகிழ வைத்த கமல்.. இன்னொரு கையில் ஊசியும் இருக்கு!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன், ஷிவானி எல்லாம் ஒண்ணுமே பண்ணலன்னு சொல்றீங்க, ஆனால், அவங்க தான் டாப் 2 இடத்தை பிடித்தார்கள், அதையும் நீங்க தான் கொடுத்தீங்கன்னு கமல் சொன்னதும், இருவருக்கும் சிரிப்பு தாங்கல..

அதிலும், ரம்யா பாண்டியனை பற்றி விளாவரியா கமல் சார் புட்டுப் புட்டு வைத்ததை பார்த்தால், அடுத்த வாரம் இவங்க தான் டார்கெட் போல தெரியுது.

இப்படித்தான் அனிதாவையும் சுரேஷையும் டிரெண்டாக்கி நல்லா செஞ்சி விட்டார் பிக் பாஸ்.

முதல் வார தலைவி

முதல் வார தலைவி

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் முதல் வாரத்திலேயே தலைவி பதவியை பிடித்து ரசிகர்களின் அன்பை அள்ளி விட்டார் இடுப்பழகி ரம்யா பாண்டியன். பிக் பாஸ் வீட்டில் அடிக்கடி, இடுப்பை காட்டி கொஞ்சம் ரசிகர்களையும் ஆசுவாசப்படுத்துங்க என்ற கோரிக்கையை ரசிகர்கள் வைத்து வருகின்றனர்.

கில்லாடியா விளையாடுறாங்க

கில்லாடியா விளையாடுறாங்க

இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மொட்டை தாத்தா சுரேஷ் தாம்பா கலக்கு கலக்குன்னு கலக்குறாரு என ரசிகர்கள் மற்றும் ஹவுஸ்மேட்ஸ் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் டாஸ்க்கில், ஆஜீத்தை வைத்து சுரேஷை வெளியனுப்பி கில்லாடியா விளையாடி ரியோவின் அந்த தூக்கி சுத்துற அன்பையும் பெற்றாங்க.

சிரிச்சுகிட்டே சாதிச்சிடுறாங்க

சிரிச்சுகிட்டே சாதிச்சிடுறாங்க

ரம்யா பாண்டியன் இன்னும் நல்லா கேம் விளையாடுல என ஹவுஸ்மேட்கள் கருதினாலும், எவிக்‌ஷன் லிஸ்டில் அவங்க தான் நம்பர் ஒன் இடத்தை பிடித்து பிக் பாஸ் வின்னராக ஆனாங்க, சிரிச்சுக்கிட்டே சாதிச்சிடுறாங்க என கமல் சொன்னதும் ரம்யா பாண்டியனுக்கு சிரிப்பை அடக்கவே முடியலை.

குழந்தை மருத்துவர்

குழந்தை மருத்துவர்

பிக் பாஸ் வீட்டில் மருத்துவ முத்தம் ரொம்பவே பிரபலம். இந்த சீசனில் குட்டி ஜோசியர், நாட்டாமை என சில கதாபாத்திரங்கள் இருக்கும் நிலையில், ரம்யா பாண்டியனுக்கு குழந்தை மருத்துவர் (paediatrician) என்ற பட்டத்தை கமல் சார் கொடுத்து அதற்கான காரணத்தையும் சொல்லும் போது சுரேஷ் ரியாக்‌ஷன் வேற லெவல்.

ஊசியும் குத்துறாங்க

ஊசியும் குத்துறாங்க

ரம்யா பாண்டியனை தூக்கிப் பேசுவது போல தூக்கிவிட்டு, தொபக்கட்டின்னு கீழே போட்டு மிதிப்பது போல கமல் சார் அவங்களை குழந்தை மருத்துவர், இந்த பக்கம் சாக்லேட் கொடுத்துட்டு, அந்த பக்கம் ஊசி போட்டுடுவாங்க என ரம்யா பாண்டியனின் ரியல் ஃபேஸை ஹவுஸ்மேட்கள் முன்னால் தோலுரித்துக் காட்டி தொங்கவிட்டு விட்டார்.

இனி ஆட்டம் எப்படி இருக்கும்

இனி ஆட்டம் எப்படி இருக்கும்

ஏற்கனவே, சுரேஷ் சக்கரவர்த்தி, அனிதா சம்பத்தை ஹைலைட் பண்ண நிலையில், அவங்க ரெண்டு பேரையும் அப்படியே இப்போ ஓரம் கட்டி வைத்து விட்டு, பாலாவையும் அர்ச்சனாவையும் ஹைலைட் பண்றாங்க, இந்நிலையில், ரம்யாவை கமல் ஹைலைட் பண்ணுகிற நிலையில், அடுத்த வாரம் வேற ஒரு ஆட்டம் இருக்கும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X