சாப்பாடு விஷயத்தில் பார்ஷியாலிட்டி நடக்குது.. சுச்சியின் கம்ப்ளையன்ட்.. பஞ்சாயத்து பண்ணிய கமல்!
சென்னை: சாப்பாடு விஷயத்தில் பார்ஷியாலிட்டி காட்டப்படுவதாக சுச்சி கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக நடிகர் கமல் பஞ்சாயத்து செய்து வைத்தார்.
பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் நாமினேஷன் புராசஸ் இல்லை என்றாலும் அவ்வப்போது சில பல பிரச்சனைகள் உருவாயின.
அந்த வகையில் கடந்த வாரம் சாப்பாடு தொடர்பாக சில பிரச்சனைகள் ஏற்பட்டது.

பிக்பாஸிடம் புகார்
பாசிப்பருப்பு, எலுமிச்சை, புளி சாதம், குப்பை தொட்டியில் கொட்டப்பட்ட சாப்பாடு என ஒவ்வொரு ஹவுஸ்மெட்டும் ஒரு பிரச்சனையை உருவாக்கினர். அந்த வகையில் சாப்பாடு விஷயத்தில் வைல்ட் கார்டு என்ட்ரியான சுச்சியும் பிக்பாஸிடம் ஒரு புகார் கூறினார்.

ரியோ கேங்குக்கு முன்னுரிமை
அதாவது, பிக்பாஸ் வீட்டில் சாப்பாடு விஷயத்தில் பார்ஷியாலிட்டி நடப்பதாக கூறினார். சாப்பாடு விஷயத்தில் ரியோ அன்ட் கேங்குக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.

எல்லாம் கிடைப்பதில்லை
மேலும் லெமன், ஆப்பிள் போன்ற ஃபுரூட்ஸ் வந்த உடனேயே காலியாகி விடுவதாகவும், ரமேஷ் உள்ளிட்டோர் எடுத்து சாப்பிடுவதாகவும் குற்றம் சாட்டினார். இதனால் எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பதில்லை என்றும், இதனை சரி செய்ய வேண்டும் என்றும் கூடுதலாக அனுப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

கமல் விசாரணை
இந்நிலையில் இன்றைய எபிசோடில் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் கமல். இதுதொடர்பாக சுச்சியிடம் விசாரித்தார். அப்போது, அந்த பிரச்சனை அப்போதே விளக்கம் கொடுக்கப்பட்டு சரிசெய்யப்பட்டு விட்டது என பதில் சொன்னார் சுச்சி.

கூடுதலா கொடுங்க
அதனைக் கட்ட கமல் இப்போது சாப்பாடு விஷயத்தில் எந்த பிரச்சனையும் இல்லைதானே எந்த பார்ஷியாலிட்டியும் இல்லையே என்றார். அதற்கு பதில் சொன்ன சுச்சி, இல்லை சார், ஆனால் லெமன் கொஞ்சம் கூடுதலாக கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.


Click it and Unblock the Notifications











