ஃபேரா விளையாடுங்க.. பாலாவ பேசவிட்டுட்டு.. கூட்டிட்டு போறீங்க.. ரம்யாவை அசிங்கப்படுத்திய கமல்!

சென்னை: ஆரி ஏதாவது பேசினால் மட்டுமே எகிறும் ரம்யாவுக்கு குட்டு வைக்காத குறையாக அசிங்கப்படுத்தினார் கமல்.

பிக்பாஸ் வீட்டில் ரம்யா பாண்டியனுக்கு பிடிக்காத ஒரு நபர் என்றால் அது ஆரிதான். ஆரி என்ன பேசினாலும் அங்கு மூக்கை நுழைத்து அவரை மட்டப்படுத்துவதை வேலையாக வைத்துள்ளார் ரம்யா.

ஃபிரீஸ் டாஸ்க்கின் போது வீட்டிற்கு வந்த ஹவுஸ்மேட்ஸின் குடும்பத்தினர் ஆரியை பாராட்டியதை பார்த்து வயிற்றெரிச்சல் கொண்ட அவர், ஹவுஸ்மேட்ஸ் பலரிடமும் ஆரி குறித்து பேசி புலம்பினார்.

நானும் பதிவு பண்ணுவேன்

நானும் பதிவு பண்ணுவேன்

ஆரிக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு, அவர் கேமரா முன்பு பேசுவதால் கிடைத்தது என்று நினைத்த ரம்யா, இனி நானும் கேமரா முன்பு பேசுவேன் எனக் கூறி தன்னுடைய புரிதல் எவ்வளவு கேவலமாய் இருக்கிறது என்று உணர்த்தினார்.

டார்கெட் செய்த ரம்யா

டார்கெட் செய்த ரம்யா

அதோடு ஆரியை எப்படி வந்தவர்கள் எல்லாம் பாராட்டினர்? அவரை தோலுரித்து காட்ட வேண்டும் என்று பாலாஜியுடன் சேர்ந்து கங்கணம் கட்டினார் ரம்யா. தனது தம்பி ஆரி குறித்து கூறியும் அவரை டார்கெட் செய்தார் ரம்யா.

நீங்க பேசாதீங்க ஆரி

நீங்க பேசாதீங்க ஆரி

எப்போதுமே மற்றவர்கள் ஆரியை திட்டும் வரை அமைதி காத்து அதைக் கேட்டு ரசிக்கும் ரம்யா, ஆரி விளக்கம் கொடுத்தாலோ பதில் பேசினாலோ உடனே நீங்க பேசாதீங்க ஆரி என்று கூறி எதிரில் இருப்பவரை அழைத்து சென்று விடுகிறார்.

விஷப் பூச்சி ரம்யா

விஷப் பூச்சி ரம்யா

இதை ஆரம்பம் முதலே செய்து வருகிறார் ரம்யா. ஆரியிடம் யார் பிரச்சனை செய்கிறார்களோ அவர்களுடன் கூட்டு சேர்ந்துகொண்டு ஆரியை வச்சு செய்வார் ரம்யா. இதனால் விஷ பாண்டியன், விஷப் பூச்சி, பாய்சன், ஸ்னேக் என பல பட்ட பெயர்களை சமூக வலைதளங்களில் பெற்றுள்ளார் ரம்யா.

குற்றம் கடிதல்

குற்றம் கடிதல்

ரம்யாவின் இந்த நடவடிக்கையை கவனித்த கமல், நேற்று செம சவுக்கடி கொடுத்தார். அதாவது குற்றம் கடிதல் தப்பு இல்ல. அது எவ்வளவு கடுமையா கடியுறோம் என்பதை எல்லாரும் ஞாபகம் வச்சுக்கோங்க.

பேசுற வரைக்கும் விட்டுட்டு

பேசுற வரைக்கும் விட்டுட்டு

எடுத்துக்காட்டா ரம்யாவை சொல்றேன். பாலாஜி பேசும் வரை அவரை பேச விட்டுவிட்டு ஆரி பதில் சொல்ல வரும்போது மட்டும், பாலாஜியை கூட்டிட்டு போயிடுறாங்க. இது ஒரு நல்ல ஆர்க்யூமென்ட் இல்ல.

பாலாஜியை தானே சொல்றாரு..

பாலாஜியை தானே சொல்றாரு..

உங்களுக்கு ஆரி மேல வெறுப்பு இருக்கலாம். எல்லாத்துக்கும் சொல்லிக்கிட்டே இருக்காரு எடுத்தெடுத்து
வைக்கிறாருன்னு.. பாலாஜியை தானே சொல்றாரு என்று குட்டு வைக்காத குறையாக விளாசி விட்டார்.

உங்களுக்காக விளையாடவில்லை

உங்களுக்காக விளையாடவில்லை

தேவையில்லாமல் ஒரு சைடாக பேசுகிறீர்கள். நீங்கள் உங்களுக்கு விளையாடவில்லை. நியாமான பாயிண்டை எடுத்து வையுங்கள்.. அடிக்கோடிட்டு காட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நியாயமான பாயிண்ட்டாக இருந்தால்
கைத்தட்ட ஆள் இருக்கிறது என்று வெளுத்துவிட்டார்.

மறைந்த மேனுஃபேக்ட்சரிங் டிஃபெக்ட்

மறைந்த மேனுஃபேக்ட்சரிங் டிஃபெக்ட்

கமல் வெளுத்த வெளுப்பில் ரம்யாவின் முகத்தில் ஈயாடவில்லை. எல்லாவற்றுக்கும் சம்பந்தமில்லாமல் நக்கல் சிரிப்பு சிரித்துவிட்டு மேனுஃபேக்ட்சரிங் டிஃபெக்ட் என்று கூறி வந்த ரம்யாவின் முகத்தில் நேற்று சிரிப்பே இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X