கமலின் இந்தியன் 2 வருமா ? வராதா ?... தீவிரமாக நடக்கும் சமரச பேச்சுவார்த்தை

சென்னை : 1996 ம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் அடுத்த பாகமாக இந்தியன் 2 படம் தயாராகி வந்தது. 22 ஆண்டுகளுக்கு பிறகு கமல் - டைரக்டர் ஷங்கர் இணைந்துள்ள படம் இது. கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த படத்தின் வேலைகள் துவங்கப்படாமல் உள்ளது.

படத்தின் வேலைகள் துவங்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை படத்தின் வேலைகள் முடிக்கப்படவில்லை. க்ரைன் விபத்து, கொரோனா, லாக்டவுன், தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் டைரக்டர் ஷங்கர் இடையேயான பிரச்சனை போன்ற பல காரணங்களால் இதுவரை படத்தின் வேலைகள் மீண்டும் துவங்கப்படாமல் உள்ளது.

வழக்கு தொடர்ந்த லைகா

வழக்கு தொடர்ந்த லைகா

இந்தியன் 2 படத்தின் வேலைகள் தொடர்ந்து தள்ளிப் போனதால், அடுத்தடுத்த படங்களை அறிவித்து, அதற்கான வேலைகளில் இறங்கினார். இதனால் இந்தியன் 2 படத்தை முடிக்காமல் மற்ற படங்களை ஷங்கர் இயக்க தடை விதிக்க வேண்டும் என லைகா நிறுவனம் சென்னை மற்றும் ஐதராபாத் ஐகோர்ட்களில் வழக்கு தொடர்ந்தது. சமரசம் பேச கோர்ட் அறிவுறுத்தியும், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

வருமா வராதா

வருமா வராதா

இதற்கிடையில் ஷங்கர், மற்ற படங்களை இயக்க தடையில்லை என கோர்ட் உத்தரவிட்டுள்ளதால் ராம் சரண் உடனான படம், அந்நியன் இந்தி ரீமேக் உள்ளிட்ட படங்களின் வேலைகளை துவக்கி, பிஸியாகி விட்டார் ஷங்கர். இந்தியன் 2 தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இந்த படம் வருமா, வராதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

விக்ரமிற்கு பிறகு இந்தியன் 2

விக்ரமிற்கு பிறகு இந்தியன் 2

லேட்டஸ்ட் தகவலின்படி, தயாரிப்பாளர் உடனான இந்தியன் 2 விவகாரம் முடிவுக்கு வந்து விட்டால், கமல் தற்போது நடித்து வரும் விக்ரம் படத்தின் வேலைகள் முடிந்த பிறகு இந்தியன் 2 வேலைகள் மீண்டும் துவங்கப்படும் என கூறப்படுகிறது. ஆனால் டைரக்டர், தயாரிப்பாளர் இடையேயான மோதல் முடிவுக்கு வராமல் இழுத்துக் கொண்டே போவதால் படத்தின் வேலைகள் எப்போது துவங்கப்படும் என தெரியவில்லை.

தலையிட்ட கமல்

தலையிட்ட கமல்

கோர்ட் உத்தரவின் பேரில் ஷங்கர் - லைகா இடையேயான விவகாரம் முடிவுக்கு வராததால், சமீபத்தில் கமலும் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளார். அமைதியான முறையில் பிரச்சனையை தீர்ப்பதற்காக இரு தரப்பையும் அழைத்து, கமல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். நட்பு ரீதியாக இந்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறாராம் கமல்.

கமலின் திட்டம்

கமலின் திட்டம்

கமல் நடத்தும் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டினால் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தை முடித்த உடன் இந்தியன் 2 படத்தை துவக்கலாம் என கமலும் நினைத்துள்ளாராம். அதே சமயம் ஷங்கரும் ராம் சரண் லீட் ரோலில் நடிக்கும் படத்தின் வேலைகளை முடிக்க உள்ளார்.

60 சதவீதம் வேலை முடிந்தது

60 சதவீதம் வேலை முடிந்தது

இதுவரை கிடைத்த தகவலின்படி இந்தியன் 2 படத்தின் 60 சதவீதம் வேலைகள் முடிந்து விட்டதாம். இந்த படத்தில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். முதல் முறையாக கமலுடன் விவேக் இணைந்து நடித்து வந்த படம் இது. விவேக் திடீரென உயிரிழந்ததால் அவர் நடித்த போலீஸ் கேரக்டரில் வேறு ஒருவரை நடிக்க வைக்கவும் ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X