twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமலுக்கு மக்கள் பிரச்சனையை விட அதிமுகவை விமர்சிப்பது தான் முக்கியம்: அமீர் பொளேர்

    By Siva
    |

    Recommended Video

    கமல் லாயக்கில்லை.. சீமான் தெளிவாக இருக்கிறார்.. இயக்குநர் அமீர்- வீடியோ

    சென்னை: கமல் ஹாஸனுக்கு மக்கள் பிரச்சனையை விட அதிகமுகவை விமர்சிப்பதே பெரிதாக தெரிகிறது என்கிறார் இயக்குனர் அமீர்.

    தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இயக்குனர் அமீர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கமல் அரசியலுக்கு வருவது, அன்புச்செழியன் விவகாரம் உள்ளிட்டவை பற்றி பேசினார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,

    கறார்

    கறார்

    பைனான்ஸியர் அன்புச்செழியன் கறாரான ஆள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் நான் அவருடன் வியாபாரம் செய்யவில்லை. அன்புச்செழியனுக்கு அரசியல் பின்புலம் உள்ளது என தெரியும்.

    தற்கொலை

    தற்கொலை

    அன்புச்செழியனுக்கு பின்னால் எந்தெந்த அரசியல்வாதிகள் ஆதரவாக இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது. அசோக் குமார் தற்கொலை வழக்கு இதுவரை சரியான பாதையில் செல்கிறது என நினைக்கிறேன்.

    உதவி

    உதவி

    தலைமறைவாக உள்ள அன்புச்செழியனுக்கு அரசியல்வாதி யாரோ ஆதரவாக உள்ளார். அவர் யார் என்று தெரியவில்லை. தமிழகத்திற்கு ஏற்ற தலைமை கமல் அல்ல.

    கமல்

    கமல்

    அண்மை காலமாக கமல் அதிமுக அரசை விமர்சிப்பதில் தான் அதிக கவனம் செலுத்துகிறார். அவருக்கு மக்கள் பிரச்சனையை விட விமர்சனம் பெரிதாகிவிட்டது.

    அரசியல்

    அரசியல்

    விஜய்யின் வயதை கணக்கில் கொண்டாலும், படங்களின் கணக்கில் கொண்டாலும் அவர் அரசியலுக்கு வந்த உடனே முதல்வர் ஆகும் வாய்ப்பு குறைவு. அவர் உடனே அரசியலுக்கு வருவது சரி அல்ல. அவர் இன்னும் சில காலம் பொறுமையாக காத்திருக்க வேண்டும்.

    அன்பு

    அன்பு

    அன்பு அண்ணன் ஓடி ஒளிந்தது போதும். தயவு செய்து வெளியே வந்து சரியான முடிவை எடுங்கள் என அமீர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டதில் இருந்து அன்பு தலைமறைவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Director Ameer said that Kamal Haasan is more interested in criticising ADMK government rather than solving people's issues. He doesn't think that Kamal is fit to lead Tamil Nadu now. Ameer has requested financier Anbu Chezhiyan to come out and find a solution for the current scenario.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X