விக்ரம் பட இயக்குநருடன் இணைந்த கமல்ஹாசன்?.. அட கூட்டணி வேற மாதிரி இருக்குமே ப்பா
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படம் தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக அவர் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்கிடையே தயாரிப்பு பணியிலும் படு பிஸியாக இருக்கிறார். கடந்த வருடம் அவர் தயாரித்த அமரன் திரைப்படம் மெகா ஹிட்டானது. மொத்தம் 350 கோடி ரூபாய்வரை வசூலித்தது. தயாரிப்பாளராகவும் பெரிய வெற்றியை பெற்றதால் கமல் உச்சக்கட மகிழ்ச்சியில் இருந்தார். ஆனால் தக் லைஃப் அவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.
கமல்ஹாசன் இந்திய சினிமாவின் பல்கலைக்கழகம் என்று புகழப்படுபவர். தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் ஏதாவதொரு சோதனை முயற்சியை செய்து பார்ப்பவர். அது சில நேரங்களில் சக்சஸ் ஆகும்; சில நேரங்களில் ஃபெயிலியர் ஆகும். ஆனால் அதைப் பற்றியெல்லாம் கமல் தனது தலையில் ஏற்றிக்கொள்வதில்லை. அவரைப் பொறுத்தவரை கலையில் ஏதாவதொரு புது விதத்தை புகுத்த வேண்டும் என்பதுதான் முதல் எண்ணமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல் - மணிரத்னம்: கமல்ஹாசனும் மணிரத்னமும் இணைந்து ஏற்கனவே நாயகன் என்ற கல்ட் க்ளாசிக் படத்தை கொடுத்திருக்கிறார்கள். அந்தப் படம் இன்றுவரை சிறந்த அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. அதன் காரணமாக தக் லைஃப் படத்தில் அவர்கள் மீண்டும் இணைந்திருந்ததால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை படம் சம்பாதித்து வைத்திருந்தது. சில நாட்களுக்கு முன்னதாக படம் வெளியானது. ரசிகர்களும் ஆவலோடு படம் பார்க்க சென்றார்கள்.

ரசிகர்கள் ஏமாற்றம்: ஆனால் ரசிகர்களுக்கு படம் முழு திருப்தியை கொடுக்கவில்லை. நாயகனுக்கு முன்னர் வந்திருக்க வேண்டிய கதையை இப்போது எடுத்திருக்கிறார்களே என்று நொந்துகொண்டார்கள் அவர்கள். விமர்சனம் மட்டுமின்றி கடுமையான ட்ரோலையும் தக் லைஃப் சந்தித்தது. இதற்கு முன்னதாக வெளியான இந்தியன் 2வும் ட்ரோலில் சிக்கியது. எனவே வரிசையாக இரண்டு படங்கள் இப்படி படுத்துவிட்டதே என்று அவர் கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாக தெரிகிறது.
தயாரிப்பாளராக பிஸி: தக் லைஃப் படத்தை கமல்தான் தயாரித்திருந்தார். இதற்கு முன்னர் அவர் சிவகார்த்திகேயனை வைத்து தயாரித்த அமரன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி 350 கோடி ரூபாயை வசூலித்தது. ஆனால் தான் ஹீரோவாக நடித்து தானே தயாரித்த தக் லைஃப் இப்படி சொதப்பியதை அவர் கண்டிப்பாக எதிர்பார்த்திருக்கமாட்டார்தான். இருப்பினும் அடுத்தடுத்து படங்களை தயாரிப்பதில் தொடர்ந்து ஆர்வம் காட்டிவருகிறார் கமல்.
அருணுடன் இணையும் கமல்?: இந்நிலையில் கமல்ஹாசன் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இயக்குநர் அருண்குமார் இயக்கப்போகும் படத்தை தயாரிக்க கமல் முடிவு செய்திருப்பதாகவும்; சமீபத்தில்தான் ராஜ்கமல் தரப்பிலிருந்து அருணிடம் கதை கேட்டு அதற்கு ஓகே சொல்லிவிட்டார்கள். மிக விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும்; இப்போது ஹீரோ தேடும் படலம் மும்முரமாக தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
செம எதிர்பார்ப்பு: அருண்குமாரை பொறுத்தவரி பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா, வீர தீர சூரன் ஆகிய நான்கு படங்களை இயக்கியிருக்கிறார். நான்கு படங்களுமே அவருக்கு நல்ல பெயரைத்தான் பெற்றுக்கொடுத்திருக்கிறது. அதிலும் சித்தா படத்தை கமல்ஹாசனும் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது கமல் தயாரிப்பில் அருண் படம் இயக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளதால் இக்கூட்டணி மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











