Kamal: “கமல்ஹாசனை ஒருதடவ கட்டிப்பிடிச்சதுக்கு 3 நாளா குளிக்கல..” ஜெயிலர் பிரபலம் சொன்ன சுவாரஸ்யம்!

சென்னை: கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான கமல்ஹாசன் அடுத்தடுத்து மெகா பட்ஜெட் படங்களில் கமிட்டாகி வருகிறார். இந்தியன் 2, கல்கி படங்களைத் தொடர்ந்து மணிரத்னம், ஹெச் வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கமல்ஹாசனை முதல்முறையாக கட்டிப்பிடித்த பின்னர் 3 நாட்கள் குளிக்கவே இல்லை என ஒரு பிரபலம் தெரிவித்துள்ளார். ஜெயிலர் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைந்து தாதாவாக மிரட்டிய கன்னட டாப் ஹீரோ சிவராஜ்குமார் தான் அவர்.

 Kamal: Jailer fame Shivarajkumar emotional about Kamal Haasan Summary

கமல்ஹாசன் குறித்து சிவராஜ்குமார் நெகிழ்ச்சி : சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த வாரம் 10ம் தேதி வெளியானது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் லிஸ்ட்டில் இணைந்துள்ளது. பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் மாஸ் காட்டி வரும் ஜெயிலருக்கு, தொடர்ந்து ரசிகர்களிடம் ஆதரவு கிடைத்து வருகிறது.

இந்தப் படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் ரஜினி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன், மகனாக வசந்த் ரவி ஆகியோரும், முக்கியமான கேமியோ ரோலில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களில் நரசிம்மா என்ற கேங்ஸ்டராக நடித்துள்ள சிவராஜ்குமார், கோலிவுட் ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளார்.

தியேட்டரில் இவரது என்ட்ரி சீனுக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதுவரை தமிழ்ப் படங்களில் பெரிதாக தலைக் காட்டாத சிவராஜ்குமார், ஒரே படத்தில் அதுவும் சில நிமிட காட்சிகளிலேயே செம்ம மாஸ் காட்டி விட்டார். தமிழ் மட்டுமின்றி கன்னட ரசிகர்களும் சிவராஜ்குமாரின் நரசிம்மா கேரக்டரை கொண்டாடி வருகின்றனர்.

சிவராஜ்குமாரின் அப்பா ராஜ்குமார் கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்ததோடு, முதலமைச்சராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இவரின் தம்பி புனித் ராஜ்குமாருன் முன்னணி நடிகராக இருந்த நிலையில், மாரடைப்பு காரணமாக ஓராண்டுக்கு முன்பு உயிரிழந்தார். கன்னட திரையுலகில் சிவராஜ்குமாருக்கு மிகப் பெரிய மார்க்கெட் உள்ளது. ஜெயிலர் படத்தில் நரசிம்மா கேரக்டர் கொடுத்த ஹைப் காரணமாக, அவர் நடித்துள்ள கோஸ்ட் திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கமல் குறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ள சிவராஜ்குமார், ரொம்பவே எமோஷனலாக பேசியுள்ளார். சிவராஜ்குமார் இளம் வயதாக இருக்கும் போது, அவரது தந்தையை சந்திக்க கமல்ஹாசன் சென்றுள்ளார். அப்போது கமலிடம் பேச தயங்கியபடி ஓரமாக நின்றுள்ளார் சிவராஜ்குமார். அதனை பார்த்துவிட்ட கமல், "இது யார்" என ராஜ்குமாரிடம் கேட்டுள்ளார்.

பின்னர் அவர் "இதுதான் தனது பெரிய மகன் சிவராஜ்குமார்" என அறிமுகம் செய்துள்ளார் மறைந்த நடிகர் ராஜ்குமார். அதன் பிறகு கமல்ஹாசனே சிவராஜ்குமாரை அழைத்து பேசியுள்ளார். அப்போது உங்களை ஒருமுறை கட்டிப்பிடிக்க வேண்டும் என சிவராஜ்குமார் கேட்க, கமல்ஹாசன் உடனடியாக ஒரு கட்டிப்பிடி வைத்தியத்துடன் வைப் கொடுத்துள்ளார். இந்த மகிழ்ச்சியில் கமல்ஹாசனை கட்டிப்பிடித்த சந்தோஷத்தில் மூன்று நாட்கள் வரை குளிக்காமல் இருந்தாராம் சிவராஜ்குமார்.

இதனை அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளது வைரலாகி வருகிறது. அதேபோல், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஒருமுறை, "கமல் சாரை இப்போது தொட்டுவிட்டேன்... இனிமேல் நான் இங்கேயே உயிரிழந்தாலும் பரவாயில்லை" எனக் கூறி ஷாக்கிங் கொடுத்தார். சிவராஜ்குமாரோ கமலை கட்டிப்பிடித்துவிட்டு குளிக்காமல் இருந்துள்ளார். இந்த வீடியோவை கமல் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X