Kamal: அதிரடியாக வெளியான KH 237 அப்டேட்... கமலின் மெஹா கூட்டணியில் இணைந்தது இவங்களா..?

சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2, கல்கி படங்களில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் நடிக்கவுள்ளார். கேங்ஸ்டர் மூவியாக உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜனவரி இறுதியில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தரமான அப்டேட் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

கமலின் KH 237 அபிஸியல் அப்டேட்
கடந்த 2022ம் ஆண்டு வெளியான விக்ரம் படத்தின் மூலம் வெறித்தனமாக கம்பேக் கொடுத்தார் கமல்ஹாசன். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடி ரூபாய்க்கும் வசூலித்து இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. இதனையடுத்து மீண்டும் நடிப்பிலும் தயாரிப்பிலும் பிஸியாகிவிட்டார் உலக நாயகன். ஷங்கருடன் மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்கிய கமல், சில தினங்களுக்கு முன்னர் நடித்தும் முடித்துவிட்டார்.

 Kamal joined his KH 237 film with Anbariv Masters

இன்னொரு பக்கம் கல்கி படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பாகம் மே 9ம் தேதி ரிலீஸாகும் என படக்குழு இன்று அறிவித்தது. அதனைத் தொடர்ந்து கமல்ஹாசனும் ஒரு தரமான அப்டேட்டை வெளியிட்டுள்ளார். மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தில் கமிட்டாகியுள்ள கமல்ஹாசன், இதன் படப்பிடிப்பில் விரைவில் கலந்துகொள்ளவுள்ளார்.

தக் லைஃப் படத்தில் கமலுடன் ஜோஜூ ஜார்ஜ், ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கெளதம் கார்த்திக், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதுமட்டும் இல்லாமல் கமல் ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் யாருமே எதிர்பாரத நேரத்தில் ரசிகர்களுக்கு பொங்கல் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் கமல். அதன்படி கமலின் KH 237 படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை அன்பறிவ் மாஸ்டர்ஸ் இயக்கவுள்ளனர். கேஜிஎஃப், விக்ரம் உட்பட ஏராளமான படங்களுக்கு ஆக்‌ஷன் கோரியோகிராபி செய்து பிரபலமானவர்கள் அன்பறிவு பிரதர்ஸ். இவர்கள் ஏற்கனவே ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஒரு படம் இயக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில், திடீரென கமலுடன் இணைந்து மிரட்டியுள்ளனர். விக்ரமை தொடர்ந்து கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்துக்கும் அன்பறிவு மாஸ்டர்ஸ் தான் சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர்.

இப்போது அவர்களே நேரடியாக ஒரு படத்தை கமலுக்கு இயக்கவுள்ளது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அதேநேரம் இது கமலின் 237வது படமாக உருவாகவுள்ளது. அப்படியானால் 235, 236வது படங்கள் என்னவாக இருக்கும் என கேள்வி எழுந்துள்ளது. அதில் ஒன்று கல்கி படமாக இருந்தாலும் ஏற்கனவே ஹெச் வினோத் இயக்கத்தில் நடிக்கவிருந்த KH 233 படம் வேறு ட்ராப் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

அதனால், KH 235 கல்கி படமாகவும், KH 236 லோகேஷ் இயக்கும் விக்ரம் இரண்டாம் பாகமாகவும் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து தான் அன்பறிவு மாஸ்டர்ஸ் படத்தில் கமல் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X