twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமல்ஹாசனின் "மூன்றாம் பிறை".. முதல் பிக் பாஸ் முதல் லேட்டஸ்ட் சீசன் வரை!

    |

    சென்னை: 3வது பிக் பாஸ் சீசனை கலக்கிக் கொண்டிருக்கிறார் கமல்ஹாசன். முதல் சீசன் முதல் தற்போதைய சீசன் வரையிலான அவர் குறித்த ஒரு குட்டியூண்டு ரவுண்டப்.

    பிக் பாஸ் தமிழின் முதல் சீசனுக்காக கமல்ஹாசன் தொலைக்காட்சி தொகுப்பாளராக விஜய் டிவியில் நுழைந்தபோது, ஆரம்பத்தில் சற்று சிரமப்பட்டார். அவருக்கு புது கான்செப்ட் செட் ஆகலையோ என்று கூட நினைக்கத் தோன்றியது.

    பாதி நாட்களில் பார்வையாளர்கள் ஓவியாவை ரசிக்கத் தொடங்கியபோது, அவரும் தன் வழியில் நிகழ்ச்சியின் போட்டியாளர்களைப் பற்றிய பொது மக்களின் உணர்ச்சிகளையும் கருத்துகளையும் பிரதிபலித்தார். மக்களின் ஆதரவும் பெற்றார். நிகழ்ச்சியின் டிஆர்பி எகிறியது.

    கமலை தான் ஒன்னும் செய்ய முடியாது, இதையாவது செய்வீங்களா பிக் பாஸ்? கமலை தான் ஒன்னும் செய்ய முடியாது, இதையாவது செய்வீங்களா பிக் பாஸ்?

    திசை திரும்பினார்

    திசை திரும்பினார்

    சீசன் இரண்டில், கமல் மிகவும் சலித்து, திசை திருப்பப்பட்டார். நிகழ்ச்சியில் போட்டியாளர்களை கவனிக்கும் ஆர்வமற்று இருந்தார். அவர் வார இறுதி அத்தியாயங்க்ளில் ஏனோ தானோ வென்று தொகுத்து வழங்கினார். சிலரின் நடவடிக்கைகள் மிகவும் சர்ச்சைக்குரியதாக இருந்தபோதிலும், ஹவுஸ்மேட்களை எதிர்கொள்ள அவர் எந்த ஆர்வத்தையும் காட்டவில்லை.

    அரசியல் பேச்சுக்கள்

    அரசியல் பேச்சுக்கள்

    சீசன் ஒன்றின் கமலை போன்று இல்லாமல், இரண்டாம் சீசன் கமல், பார்வையாளர்களின் உணர்வுகளைப் பற்றி கவலைப்படாமல் அவரது முன்னுரிமைகள் குறித்தும் அவரின் அரசியல் அத்தியாயம் குறித்தே பேசுவதாக தோன்றியது. அவர் நிகழ்ச்சியில் தன்னை மக்கள் பிரதிநிதியாக என்றே கூறினார். இதனால், வீட்டிலுள்ள ஒவ்வொரு சம்பவத்தையும் மிகுந்த தீவிரத்துடன் நடத்த அவர் கடமைப்பட்டிருக்கிறார்.

    எதிர்பார்ப்புகள்

    எதிர்பார்ப்புகள்

    மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் வாரத்தின் ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சியில் தங்கள் வாழ்க்கையின் விலைமதிப்பற்ற மணிநேரங்களை முதலீடு செய்திருக்கிறார்கள். ஹவுஸ் மேட்ஸ் பெரும்பாலும் இரவு உணவு மேஜையில் சண்டையிட்டனர். ஒவ்வொரு முறையும், கமல்ஹாசன் தொகுப்பாளராக மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை, வீட்டின் பிரச்சினைகளை சரி செய்வதில் தோல்வியுற்றதால், அது நிகழ்ச்சியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இறுதியாக இரண்டாவது சீசனை க்ளைமாக்ஸுக்கு அழைத்துச் சென்றார்.

    திடீர் விஸ்வரூபம்

    திடீர் விஸ்வரூபம்

    மூன்றாவது சீசனில், கமல் விஸ்வரூபம் எடுத்துள்ளார். ஆனால் அவர் நிகழ்ச்சியில் அவருக்கென்று ஒரு எல்லை கோடு வரையறுத்து அதற்குள் நிகழ்ச்சியை நடத்துகிறார். அந்த வரம்புகளுக்குள், பார்வையாளர்களுக்கு அவர்களின் எதிர்பார்ப்பை தருகிறார். அவர் இனி அரசியல் கருத்துக்களைத் தெரிவிக்க மட்டுமே மேடையைப் பயன்படுத்தாமல் பார்வையாளர்களை குஷிப்படுத்த தொடங்கினார்.

    செம நேர்த்தி

    செம நேர்த்தி

    குறிப்பாக கடந்த வாரத்தை நேர்த்தியாக கையாண்டார் கமல்ஹாசன், எடுத்துக்காட்டாக, எபிசோடில், கவின், சாக்‌ஷி மற்றும் லோஸ்லியா இடையேயான முக்கோண காதலில் வெடித்த சர்ச்சைகளை அவர் நேர்த்தியாகக் கையாண்டார். கமல் மென்மையாக நடந்து கொண்டார். போட்டியாளர்களின் உணர்வுகளை உணர்ந்து தனிப்பட்ட கருத்ததுக்களை திணிக்காமல் நடந்நது கொண்டார்.

    சாக்ஷி லாஸ்லியா

    சாக்ஷி லாஸ்லியா

    சாக்‌ஷி மற்றும் லாஸ்லியா இருவரில் கவின் (உண்மையில்) யாரை விரும்பினார்? பொழுதுபோக்கிற்காக அவர் சாக்‌ஷியை பொய்யாக காதலித்தாரா?சாக்‌ஷியை விட்டு அவர் ஏன் திடீரென்று ஒதுங்கினார்? சாக்‌ஷியுடன் நெருக்கமாக இருப்பது பட்டத்தை வெல்லும் வாய்ப்புகளை பாதிக்கும் என்று அவர் கவலைப்பட்டாரா? அவர் லாஸ்லியாவுடன் அதிகம் தொடர்பு காரணம் அவருக்கு இருந்த ரசிகர்களின் ஆதரவா?

     கவினை வெளியேற்றவில்லை

    கவினை வெளியேற்றவில்லை

    கமல்ஹாசன் கவினை வெளியேற்றியிருக்கலாம், ஆனால், 64 வயதான சூப்பர் ஸ்டார் அவ்வாறு செய்யவில்லை. அதற்கு பதிலாக, அவர் "மக்களின் உணர்ச்சிகளுடன்" விளையாட வேண்டாம் என்று கவினிடம் கூறிவிட்டு முன்னேறினார். "ஒரு தந்தை அல்லது சகோதரராக இருந்தாலும், இதுதான். பெண்கள் புரிந்துகொள்வார்கள், ஆனால் தந்தைகள் இதை ஏற்றுக்கொள்வார்களா என்பது எனக்குத் தெரியவில்லை" என்று அவர் பார்வையாளர்களிடம் கூறினார்.

    நீண்ட சிறுகதை

    நீண்ட சிறுகதை

    பிக் பாஸ் போன்ற ஒரு நிகழ்ச்சியுடன் தன்னை இணைத்துக் கொள்வதன் மூலம் அவர் தன் இலக்கில் இருந்து நகர்ந்துவிட்டார் கூறும் மக்களுக்கு , இது முற்றிலும் தவறானது என்பது குறித்த விளக்கத்துடன் கமல்ஹாசன் சென்ற ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நீண்ட கதைச் சிறுகதை, பிக் பாஸ் நிகழ்ச்சியை வழங்குவது "தனக்கு கொடுக்கப் பட்ட மிகப்பெரிய மரியாதை" என்று தான் கருதுவதாகவும் அவர் கூறினார்.

    மதுமிதா - சாண்டி

    மதுமிதா - சாண்டி

    நேற்று சனிக்கிழமை நிகழ்ச்சியில் சேரன் மீது மீரா கொடுத்த குற்றச்சாட்டை கமல் மிக நேர்த்தியாக கையாண்டார். ஆனால் ஏனோ மதுமிதா-சாண்டி பிரச்சினையை சரி வர கையாளவில்லை. ஆனாலும் அதன் பிண்ணனியில் ஏதோ வலுவான காரணம் இருக்கும் என்று தோன்றுகிறது. இன்றோ அல்லது இனி வரும் காலங்களில் எதிர் பார்க்கலாம்.

     கண்ட்ரோல் வந்தாச்சு

    கண்ட்ரோல் வந்தாச்சு

    கமலுக்கு இனி எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிகிறது. இப்போது நிகழ்ச்சியை அவர் முழுமையாக தன் கையில் வைத்திருக்கிறார். ஆறு தசாப்தங்களாக திரைத்துறையில் அவரைத் தக்கவைத்த அதே ஆர்வத்துடன் அவர் நிகழ்ச்சியை அணுகுவார். மேலும் வரவிருக்கும் அத்தியாயங்களில் நிறைய கண்ணியத்துடன் நிகழ்ச்சியைத் பார்க்கத் தூண்டலாம்.

    English summary
    Here is a round up on Kamal Haasan's Bigg boss seasons.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X