Kamal: "வாவ்!! இது கமல்ன்னு சொன்னா அவரே நம்பமாட்டார்..” அரும்பு மீசை... குறும்பு பார்வை!

சென்னை: இந்திய சினிமாவில் உலக நாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன்.

களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நடச்சத்திரமாக அறிமுகமான கமல், இப்போது ஹாலிவுட்டே வியக்கும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ளார்.

 Kamal: Kamal Haasan 1970s vintage-style photo is trending on Twitter

வரும் 7ம் தேதி கமல்ஹாசன் பிறந்தநாள் என்பதால், அவர் நடித்து வரும் படங்களின் அப்டேட்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன.

இந்நிலையில், இது நான் தான் என கமல்ஹாசனே நம்ப முடியாத வகையில் அவரது போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.

இது கமல்ன்னு சொன்னா அவரே நம்ப மாட்டார்!
தமிழ் சினிமாவின் தனிப்பெரும் அடையாளமாகவும், நடிப்பின் பல்கலைக்கழகமாகவும் வலம் வருகிறார் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மா முதல் விக்ரம் திரைப்படம் வரை திரையுலகில் அவர் செய்திட்ட சாதனைகளை எவராலும் முழுமையாக தொகுத்துவிட முடியாது. நடிப்பு, இயக்கம், கதை, திரைக்கதை எழுதுவதில் தனித்துவம் என அனைத்திலும் அசரடிக்கக் கூடிய மகா கலைஞன் என்பது குறிப்பிடத்தக்கது.

60 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்து வரும் கமல், இதுவரை போடாத கெட்டப்புகளோ நடிக்காத கேரக்டர்களோ இல்லை எனலாம். தற்போதும் இந்தியன் 2, கல்கி படங்களில் நடித்துள்ள கமல், அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். இந்நிலையில், வரும் 7ம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாள் என்பதால், அவரது படங்களில் இருந்து அப்டேட்கள் வெளியாகவுள்ளன.

இதனால், உலகநாயகனின் ரசிகர்களும் அதீத உற்சாகத்தில் உள்ளனர். இன்று மாலை இந்தியன் 2 படத்தில் இருந்து இன்ட்ரோ டீசர் வெளியாகவுள்ளது. இதனிடையே கமலின் போட்டோ ஒன்று டிவிட்டரில் வைரலாகி வருகிறது. இந்தப் போட்டோவில் வின்டேஜ் லுக்கில் செம்ம கிளாஸிக்கலாக இருக்கும் கமல்ஹாசனை பார்த்தால், அவரே இது நான் தான் என நம்ப மாட்டார். அந்தளவிற்கு அரும்பு மீசை குறும்புப் பார்வையில் ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார்.

இந்த போட்டோவில் பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்தும் கமல் உடன் இருப்பது குறிப்பிடத்தக்கது. கமல், ஸ்ரீகாந்த் இருவரும் இணைந்து நடித்த 'பருவகாலம்' படத்தின் ஷூட்டிங் நேரத்தில் எடுத்த போட்டோவாம் இது. 1974ம் ஆண்டு வெளியான பருவ காலம் திரைப்படம், கமல் கேரியரில் முக்கியமான ஒன்றாகும். இதில் ரோஜாரமணி நாயகியாக நடித்திருப்பார். ரோஜாரமணி வேலை பார்த்த கெஸ்ட் ஹவுஸில் தங்கியவர்களில் ஒருவராக ஸ்ரீகாந்தும், அவருடைய தம்பியாக கமல்ஹாசனும் நடித்திருந்தனர்.

இன்று மாலை வெளியாகும் இந்தியன் 2 இன்ட்ரோ டீசரில், கமலின் இளமை கால கெட்டப்பான இந்தியன் தாத்தா வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கமலின் வின்டேஜ் லுக் போட்டோவும் டிவிட்டரில் வைரலாகி வருவது, அவரது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X