Kamal: "சினிமா விமர்சகர்களுக்கு படம் எடுக்குற அறிவு கிடையாது..” பிக் பாஸில் வெளுத்து வாங்கிய கமல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இதுவரை 80 நாட்களை கடந்துவிட்டது. இந்த வார இறுதிக்கான நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்தி வழங்கி வருகிறார். இதில் பிக் பாஸ் போட்டியாளர்களை அவர்களது குடும்பத்தினர் விமர்சனம் செய்தது குறித்து பேசினார். அப்போது சினிமா விமர்சகர்களையும் வெளுத்து வாங்கினார் கமல்ஹாசன்.
சினிமா விமர்சகர்கள் மீது கடுப்பான கமல்
விஜய் டிவியின் டிஆர்பி கண்டெய்னர் என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். ஹாலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை ஆதிக்கம் செலுத்திய பிக் பாஸ், கடந்த 7 ஆண்டுகளாக தமிழிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இதனை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்தாண்டு பிக் பாஸ் 7வது சீசன் நிகழ்ச்சி கடந்த 80 நாட்களாக நடைபெற்று வருகிறது.

இன்னும் இரண்டு வாரங்களில் பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும். இப்போது வரை அர்ச்சனா, மாயா, விஜய் வர்மா, நிக்சன், பூர்ணிமா ஆகியோர் இடையே பலத்த போட்டி காணப்படுகிறது. இந்நிலையில், இந்த வாரத்துக்கான சனி, ஞாயிறு எபிசோட்களை கமல்ஹாசன் ஹோஸ்ட் செய்து வருகிறார். முன்னதாக இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டுக்கு சென்று வந்தனர்.
அவர்கள் போட்டியாளர்களின் ப்ளஸ், மைனஸ்களை சொன்னதோடு, சில விமர்சனங்களையும் முன் வைத்தனர். அதுகுறித்து கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களிடம் கருத்து கேட்டார். அப்போது பலரும் விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு போட்டியில் நன்றாக விளையாடுவோம் என்றனர். அதனை வரவேற்ற கமல்ஹாசன், "விமர்சனங்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டாம், அது ஒரு கருத்து மட்டுமே, உண்மையும் கிடையாது."
"இது நல்ல Feedback மட்டுமே... எந்த விமர்சனங்களாக இருந்தாலும், அதாவது கலை, இலக்கியம், இசை, சினிமா என எதுவாக இருந்தாலும் முக்கால்வாசி பேர்களுக்கு அந்த கலையில் பிராக்டிஸ் இருக்காது. நடன விமர்சகர்களுக்கு டான்ஸ் ஆடத் தெரியாது... சங்கீத விமர்சகர்களுக்கு முழுசா பாடத் தெரியாது... சினிமா விமர்சகர்களுக்கு ஒரு படத்த முழுசா டைரக்ட் பண்ற அறிவு இருக்காது.." என ஒரு போடு போட்டார்.
அதுமட்டும் இல்லாமல் படம் முடிந்து வெளியே வரும் ரசிகர்களிடம் மைக்கை நீட்டி கேட்கப்படும் விமர்சனங்கள் தான் உண்மையான் ரிசல்ட் என்றார். அதோடு பப்ளிக் விமர்சனம் பற்றி இமிடேட் செய்து காட்டியதும் அரங்கமே அதிர்ந்தது. இப்படி நெகட்டிவாக விமர்சனங்கள் கிடைத்த எனது படங்கள் நன்றாக ஓடியது எனவும் கமல் கூறியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சமீப காலங்களாக சினிமா விமர்சனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டன. ப்ளூ சட்டை மாறன், பயில்வான் ரங்கநாதன், பரத்வாஜ், பிரசாந்த் என பல சினிமா ட்ராக்கர்கள் தங்களது யூடியூப் தளத்தில் சினிமா விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பும் கிடைக்கின்றது. அதேநேரம் சில படங்களை விமர்சனம் என்ற பெயரில் ட்ரோல் செய்வதும் நடக்கின்றன. இதனை மனதில் வைத்தே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் சினிமா விமர்சகர்களை பங்கம் செய்துள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











