Kamal: இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் வைப் கொடுத்த கமல்... போட்டோலயே இவ்ளோ கெத்து காட்டுறாரே!
சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இந்தியன் 2, இந்தியன் 3 என இரண்டு படங்களின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாம். இந்நிலையில், இந்தியன் 2 படக்குழுவினருடன் கமல் வைப் கொடுத்த போட்டோ வைரலாகி வருகிறது.
வைப் கொடுத்த உலக நாயகன்
கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு தரமான கம்பேக் கொடுத்தது. இதனால் பாதியிலேயே ட்ராப் ஆகவிருந்த இந்தியன் 2 படத்தை மீண்டும் தொடங்கினார் கமல். ஷங்கர் - கமல் கூட்டணியில் 1996ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி வருகிறது. இதனால் இந்தியன் 2 படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், எஸ்ஜே சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா ஆகியோர் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றனர். அதேபோல், மறைந்த நடிகர்கள் விவேக், மனோபாலா ஆகியோரும் இந்தியன் 2ம் பாகத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கமல் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியன் 2 படத்தில் இருந்து க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியிருந்தது.
இந்தியன் தாத்தாவின் இன்ட்ரோ வீடியோவான இது ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. அதேநேரம் இந்தப் படத்துக்காக ஷங்கர் அதிகமாக ஷூட் செய்துவிட்டாராம். அதாவது இதுவரை எடுத்த ஃபுட்டேஜ் மொத்தம் 5 மணி நேரம் வரை இருக்கிறதாம். இதனால் இந்தியன் 2 படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட ஷங்கர் முடிவு செய்துள்ளார்.
கமல்ஹாசனும் அதற்காக கால்ஷீட் கொடுத்து இந்தியன் 3 படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், இந்தியன் 2, இந்தியன் 3 படத்தின் லைட்டிங் டீம் உடன் கமல் போட்டோ எடுத்துக்கொண்டார். கமல்ஹாசன் கை கட்டிக்கொண்டு ஸ்டைலாக நிற்க, அவரை சுற்றி லைட்டிங் டீம் டெக்னீஷியன்கள் உள்ளனர். இது இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட போட்டோ என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியன் 2ம் பாகம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனைத் தொடர்ந்து இந்தியன் 3 படத்தை ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம். இதனால் 2024ல் இந்தியன் 2, இந்தியன் 3 என இரண்டு படங்களுமே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 3 ஷூட்டிங் முடிந்ததும் மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளார் கமல்ஹாசன்.


Click it and Unblock the Notifications











