Kamal: ‘ராதிகாவை இப்படி மாற்றியதில் கமலுக்கு தான் பெரும் பங்கு உள்ளது..’ ரகசியம் சொன்ன மெளலி!

சென்னை: கமல்ஹாசன், ராதிகா சரத்குமார் இருவருமே பல வருடங்களாக நெருங்கிய நண்பர்களாக பழகி வருகின்றனர்.

கடந்தாண்டு கமலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ராதிகா கலந்துகொண்டு அவருடன் டான்ஸ் ஆடியிருந்தார்.

சுமார் 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் ராதிகாவின் கேரியரில் கமலுக்கும் முக்கியமான பங்கு உள்ளதாம்.

 Kamal: Kamal has a big role in Actress Radhikas career development

அதுகுறித்து நடிகர் மெளலி சில உண்மைகளை மனம் திறந்து பேசியுள்ளார்.

ராதிகாவை மாற்றியது கமல் தான்: கிழக்கே போகும் ரயில் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ராதிகா. 1978ல் தொடங்கிய ராதிகாவின் திரை பயணம் இப்போது வரையும் தொடர்கிறது. 1980களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இப்போது நல்ல முதிர்ச்சியான நடிப்பால் கவனம் ஈர்த்து வருகிறார். சினிமா, சீரியல் என இரண்டிலுமே ராதிகாவின் ஆளுமை இன்னும் குறையவே இல்லை.

இந்நிலையில், ராதிகாவின் சினிமா கேரியரில் மிகப் பெரிய மாற்றம் வர காரணமாக இருந்தது கமல்ஹாசன் தானாம். இதுகுறித்து நடிகர் மெளலி ஒருபேட்டியில் குறிப்பிட்டுள்ளார். தெலுங்கில் கே விஸ்வநாத் இயக்கிய திரைப்படம் 'ஸ்வாதி முத்யம்.' 1986ல் வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது. காதல் பின்னணியில் உருவான இந்தப் படத்தில் ராதிகாவின் நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதாம்.

 Kamal: Kamal has a big role in Actress Radhikas career development

ஜூனியர் நாயகி ரேங்கில் இருந்த ராதிகாவுக்கு 'ஸ்வாதி முத்யம்' படம் தான் திருப்புமுனையாகவும் அமைந்துள்ளது. இதற்கெல்லாம் கமல் தான் காரணமாக இருந்துள்ளார். இதுகுறித்து நடிகரும் இயக்குநருமான மெளலியிடம் ராதிகாவே ஒருமுறை மனம் திறந்து பேசினாராம். அதில், 'ஸ்வாதி முத்யம்' படப்பிடிப்பு செல்லும் போதெல்லாம், பரீட்சை எழுதப் போவதைப் போல இருக்கும்.

எதாவது தப்பு நடந்துவிடக் கூடாது என பயந்துகொண்டே தான் நடித்தேன். ஒவ்வொரு காட்சிக்கும் கரெக்‌ஷன் சொல்லும் கமல், அதில் எப்படி நடிக்க வேண்டும் என்பதையும் அவரே நடித்துக் காட்டினாராம். அதில் கிடைத்த அனுபவம் தான் தனக்கு மிகவும் உதவியதாக ராதிகா கூறியுள்ளார். இதனை சுட்டிக் காட்டி பேசியுள்ள மெளலி, ராதிகாவின் கேரியரில் கமலுக்கு தான் பெரிய பங்கு உள்ளது எனக் கூறியுள்ளார்.

 Kamal: Kamal has a big role in Actress Radhikas career development

அதன்பின்னரே ராதிகாவுக்கு பல படங்களில் நடிக்க சான்ஸ் கிடைத்ததாம். அதேநேரம் ராதிகாவும் கமலும் இணைந்து இதுவரை மொத்தமே இரண்டு படங்களில் தான் நடித்துள்ளனர். தெலுங்கில் ஸ்வாதி முத்யம் படத்திலும், தமிழில் பேர் சொல்லும் பிள்ளை என்ற படத்திலும் மட்டுமே கமல், ராதிகா ஜோடி இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், இருவரும் இப்போது வரை நெருங்கிய நண்பர்களாக பழகி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X