Kamal: கமல்ஹாசனின் அடுத்த டார்கெட்... வேகமெடுக்கும் கல்கி 2898 AD ஷூட்டிங்... ட்ரெண்டிங் போட்டோஸ்
ஹைதராபாத்: உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார்.
விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் நடிப்பில் பிஸியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸுடன் கல்கி 2898 AD என்ற படத்தில் நடித்து வருகிறார் கமல்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல் எடுத்துக்கொண்ட போட்டோஸ் வைரலாகி வருகின்றன.
கல்கி 2898 AD ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல்
உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2, தக் லைஃப், கல்கி 2898 AD ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் இந்தியன் 2 ஷூட்டிங் முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதேபோல், கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு இனிமேல் தான் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே தெலுங்கில் நாக் அஸ்வின் இயக்கும் கல்கி 2898 AD படத்தில் கமிட்டாகியிருந்தார் கமல்ஹாசன். பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. பிரபாஸுடன் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி ஆகியோர் நடிப்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வில்லனாக கமல்ஹாசன் நடிப்பதை சமீபத்தில் தான் படக்குழு அறிவித்திருந்தது.
கல்கி 2898 AD இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாகவும், தற்போது முதல் பாகத்திற்கான ஷூட்டிங் மட்டுமே நடைபெறுவதாகவும் சொல்லப்படுகிறது. முக்கியமாக இந்தப் படத்திற்காக கமல் 15 முதல் 20 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. படத்தின் க்ளைமேக்ஸில் மட்டுமே கமல் என்ட்ரி இருக்கும் என்றும், இரண்டாம் பாகத்தில் தான் கமலின் வில்லத்தனம் மாஸ் காட்டும் எனவும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்தியன் 2 ஷூட்டிங்கை முடித்துவிட்ட கமல், தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்புக்காக கல்கி 2898 AD படக்குழுவினருடன் இணைந்துள்ளாராம். அதன்படி, ஹைதராபாத்தில் நடைபெறும் கல்கி 2898 AD படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்துகொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த ஷெட்யூலில் கமல்ஹாசன் நடிக்கும் காட்சிகள் மட்டுமே ஷூட் செய்யப்படுவதாகத் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து கமல் - பிரபாஸ் இணைந்து நடிக்கும் சண்டைக் காட்சியை படமாக்க இயக்குநர் நாக் அஸ்வின் முடிவு செய்துள்ளாராம். சலார் வெளியான பின்னர் பிரபாஸ் - கமல் பங்கேற்கும் ஷெட்யூல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











