Kamal: ஜெயிலர், லியோ ஃபீவர் ஓவர்... இனி உலகநாயகன் சம்பவம் தான்... KH 234 டைட்டில் டீசர் ரெடி!

சென்னை: கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் மூலம் கம்பேக் கொடுத்தார் உலகநாயகன் கமல்ஹாசன்.

அதேவேகத்தில் தனது 234வது படத்துக்காக இயக்குநர் மணிரத்னத்துடன் இணைந்தார்.

 Kamal: Kamal - Mani Ratnams KH 234 film Title Teaser will be out on Nov 7

கமல்ஹாசன், மணிரத்னம், ஏஆர் ரஹ்மான் என செம்ம மாஸ் கூட்டணியில் உருவாகவுள்ளது KH 234.

இந்தப் படத்தின் டைட்டில் அல்லது ப்ரொமோ டீசர் ரிலீஸ் தேதி பற்றி தரமான தகவல் கிடைத்துள்ளது.

KH 234 டைட்டில் டீசர் ரெடி

உலகநாயகன் கமல்ஹாசன் கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் மூலம் வெறித்தனமாக கம்பேக் கொடுத்தார். இதனையடுத்து மீண்டும் நடிப்பில் பிஸியான கமல், கிடப்பில் கிடந்த இந்தியன் 2 படத்தை தொடங்கினார். கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதேபோல், பிரபாஸுடன் கல்கி படத்திலும் நடித்து வருகிறார்.

இன்னொரு பக்கம் இயக்குநர் மணிரத்னம் உடன் கமல் இணையும் படம் பற்றி கடந்தாண்டு அபிஸியல் அப்டேட் வெளியானது. கமல்ஹாசனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக KH 234 அப்டேட் வெளியாகி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது. நாயகன் படத்திற்குப் பின்னர் கமல் - மணிரத்னம் கூட்டணியில் KH 234 உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

KH 234 அபிஸியல் அப்டேட் வெளியான போது, பொன்னியின் செல்வன் 2 போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் பிஸியாக இருந்தார் மணிரத்னம். அதன்பின்னர் KH 234 ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் தொடங்கிய மணிரத்னம், இந்தாண்டு கமல் பிறந்தநாளுக்காக இன்னொரு ஸ்பெஷல் அப்டேட்டை ரெடி செய்துவிட்டாராம். அதன்படி நவம்பர் 7ம் தேதி KH 234 படத்தின் ஸ்பெஷல் ப்ரொமோ வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இது KH 234 படத்தின் ப்ரொமோ டீசர் அல்லது டைட்டில் டீசராக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. KH 234 அப்டேட் வெளியான போது, இந்தப் படம் நாயகன் இரண்டாம் பாகமாக இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதற்கான விடை நவ. 7ம் தேதி தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டீசருக்கான ஷூட்டிங் ஏற்கனவே முடிந்துவிட்டதாகவும், இது ரசிகர்களுக்கு செம்ம கூஸ்பம்ஸாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

அதேநாளில் நாயகன் திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டு வெளியாகும் நாயகன் படத்தை பார்க்க ரசிகர்கள் இப்போதே ஆர்வமாக காத்திருக்கின்றனர். சில மாதங்களாக ரஜினியின் ஜெயிலர், விஜய்யின் லியோ ஃபீவரில் சிக்கித் தவித்த கோலிவுட், இனி உலகநாயகனின் KH 234 பட வைப்பில் இருக்கப் போவது நவம்பர் 7ம் தேதி கன்ஃபார்ம் ஆகிவிடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X