Kamal: KH 237 அறிவித்த அதே வேகத்தில் அடுத்த அதிரடி.. கமல் கொடுத்த க்ரீன் சிக்னல்.. ஷூட்டிங் அப்டேட்
சென்னை: கமல்ஹாசனின் 237வது படத்தை அன்பறிவ் மாஸ்டர்ஸ் இயக்கவுள்ளனர். KH 237 என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தின் அறிவிப்பு நேற்று மாலை வெளியானது. KH 237 அப்டேட் திடீரென வெளியானதால் கமல் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில், இந்தப் படத்தின் ஷூட்டிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது
கமலின் KH 237 ஷூட்டிங் அப்டேட்
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன், கல்கி படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இதில் பிரபாஸுடன் கமல் இணைந்து நடித்துள்ள கல்கி, இந்தாண்டு மே 9ம் தேதி வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து இந்தியன் 2ம் பாகம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பிலும் கமல் கலந்துகொள்ளவுள்ளார்.

நாயகன் படத்துக்குப் பின்னர் கமல் - மணிரத்னம் கூட்டணி இணையவுள்ளது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தக் லைஃப் படத்தில் கமலுடன் மலையாள நடிகர்கள் ஜோஜூ ஜார்ஜ், துல்கர் சல்மான், கோலிவுட்டில் இருந்து ஜெயம் ரவி, த்ரிஷா, கெளதம் கார்த்திக், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் நடிக்கவுள்ளனர். மேலும், ஐஸ்வர்யா ராய் கமலுக்கு ஜோடியாக நடிக்கலாம் என எத்ர்பார்க்கப்படுகிறது.
தக் லைஃப் ஷூட்டிங் இன்னும் தொடங்காத நிலையில் தான், அன்பறிவ் இயக்கத்தில் KH 237 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார் கமல்ஹாசன். முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தில் கமல் வெரைட்டியாக மிரட்டவுள்ளாராம். கேஜிஎஃப், விக்ரம் உட்பட ஏராளமான படங்களுக்கு சண்டை பயிற்சி இயக்குநர்களாக பணியாற்றிய அன்பறிவ் மாஸ்டர்ஸ், கமலின் KH 237 மூலம் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளனர்.
இதனால் KH 237 ஸ்க்ரிப்ட் தாறுமாறாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக லோகேஷ் கனகராஜ் அல்லது ராகவா லாரன்ஸ் நடிக்கும் படம் மூலம் அன்பறிவ் மாஸ்டர்ஸ் இயக்குநராக அறிமுகமாகலாம் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது உலக நாயகன் கூட்டணியில் இந்த ஆக்ஷன் பிரதர்ஸ் இணைந்துள்ளனர். இந்நிலையில், KH 237 ஷூட்டிங் இந்தாண்டு இறுதிக்குள் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியன் 3, தக் லைஃப் படங்களின் ஷூட்டிங் முடிந்ததும் KH 237 ஷூட்டிங்கை தொடங்கலாம் என கமல் க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளாராம். இதனையடுத்து அன்பறிவ் ப்ரதர்ஸ் இப்போதே ஷூட்டிங் மோடுக்கு ரெடியாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் விரைவில் KH 237 படத்தில் கமலுடன் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள் பற்றிய அப்டேட் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. இதனிடையே ஹெச் வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கவிருந்த KH 233 படம் ட்ராப் ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











