Kamal: “இதனால தான் இவர் உலகநாயகன்..” ஹாலிவுட் பார்பி ஹீரோவாக மாறிய கமல்... அசத்தல் போஸ்டர்!

சென்னை: ஹாலிவுட் படங்களான ஓபன்ஹெய்மர், பார்பி இரண்டும் கடந்த மாதம் 21ம் தேதி வெளியானது.

இந்த இரண்டு படங்களும் ஹாலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. முக்கியமாக பார்பி திரைப்படம் 17 நாட்களில் ஒரு பில்லியன் டாலர் வசூலை ஈட்டியது.

 Kamal: Kamals poster is trending in Barbie movie hero Ryan Gosling look

இந்நிலையில், இப்படத்தின் ஹீரோ ரியான் கோஸ்லிங் கெட்டப்பில் உலகநாயகன் கமல்ஹாசனின் போஸ்டர் வெளியாகி இணையத்தை தெறிக்கவிட்டுள்ளது.

பார்பி நாயகனாக மாறிய கமல்
ஹாலிவுட் படங்களான ஓபன்ஹெய்மர், பார்பி திரைப்படங்கள் கடந்த மாதம் 21ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓபன்ஹெய்மர் திரைப்படம் ஹாலிவுட் மட்டுமின்றி அனைத்துதரப்பு ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றது. அதேபோல், பார்பி படத்துக்கும் உலகம் முழுக்க மிகப்பெரிய ஓபனிங் கிடைத்தது.

குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பிடித்தமான பார்பி பொம்மைகளை பின்னணியாக வைத்து கிரெட்டா கெர்விக் இப்படத்தை இயக்கியிருந்தார். ஹாலிவுட்டில் பெண் இயக்குநர்கள் பலரும் சாதிக்காத பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையை பார்பி படத்தில் நிகழ்த்திக் காட்டினார் கிரெட்டா கெர்விக். ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான பார்பி, இதுவரை 8000 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

அதாவது 17 நாட்களில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலரை கலெக்‌ஷன் செய்துள்ளது பார்பி. பிரபல ஹாலிவுட் நடிகை மார்கட் ராபி பார்பியாகவும், டெட்பூல் படத்தின் ஹீரோ ரியான் கோஸ்லிங் லீடிங் கேரக்டரிலும் நடித்திருந்தனர். இவர்களுடன் மேலும் பல ஹாலிவுட் பிரபலங்கள் பார்பி படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நடித்த மார்கட் ராபி, ரியான் கோஸ்லிங் இருவரின் காஸ்ட்யூம் உள்ளிட்ட அனைத்தும் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்திருந்தது.

இந்நிலையில் பார்பி ஹீரோ லுக்கில் செம்ம மஜாவாக மாஸ் காட்டியுள்ளார் உலகநாயகன் கமல்ஹாசன். ரியான் கோஸ்லிங் லுக்கிற்கு மாறியுள்ள கமல்ஹாசன், பிங்க் நிற காஸ்ட்யூமில் ரியல் பார்பி பொம்மைகளுக்கே டஃப் கொடுத்துள்ளார். அசப்பில் ஹாலிவுட் நடிகர்களையே மிஞ்சிவிடும் கமலின் இந்த லுக், உலக நாயகன் ரசிகர்களை மிரள வைத்துள்ளது. தனது படங்களுக்காக அடிக்கடி கெட்டப் மாற்றி நடிக்கும் கமல், பார்பி ஹீரோவை விட செம்ம மாஸ்ஸாக காணப்படுகிறார்.

ஆனால், இது ரசிகர்களால் உருவாக்கப்பட்ட ஃபேன்மேட் போஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது. பார்பி படத்தின் டைட்டிலுடன் சமூக வலைத்தளங்ளில் வைரலாகி வருகிறது கமலின் பிங்க் போஸ்டர். சில தினங்களுக்கு முன்னர் காட்ஃபாதர் படத்தின் ஹீரோ லுக்கில் கமல்ஹாசன் போஸ்டர் ஒன்று வைரலாகி வந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது பார்பி போஸ்டரிலும் அதகளம் செய்துள்ளார் உலகநாயகன் கமல்ஹாசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X