Kamal: கமலின் விக்ரம் தான் கோலிவுட்டை காப்பாற்றியது... ஜெயிலர் என்ன செய்தது..? நெட்டிசன்கள் கேள்வி
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்ஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அதிக ஹைப் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்த ட்ரோல்களும் அதிகரித்துள்ள நிலையில், கமல் ரசிகர்கள் விக்ரம் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டுடன் களமிறங்கிவிட்டனர்.

விக்ரம் திரைப்படம் தான் கொரோனாவால் முடங்கி கிடந்த கோலிவுட்டை காப்பாற்றியதாக டிவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
கமலின் விக்ரம் தான் கோலிவுட்டை காப்பாற்றியது: ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முதன்முறையாக இணைந்த சூப்பர் ஸ்டார் - நெல்சன் காம்போ, ரசிகர்களுக்கு செம்ம ஆக்ஷன் ட்ரீட் கொடுத்துள்ளனர். உலகம் முழுவதும் நல்ல ஓபனிங் கிடைத்துள்ள ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸிலும் கோடிகளில் வசூலித்து வருகிறது.
இதனால், சமூக வலைத்தளங்கள் எங்குப் பார்த்தாலும் ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து ஏராளமான தகவல்கள் வைரலாகி வருகின்றன. முதல் நாளில் 100 கோடியை கடந்ததாகவும், மூன்றாவது நாளில் 220 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் சொல்லப்பட்டது. அதேபோல், முதல் வாரத்தின் முடிவில் 300 கோடிக்கும் அதிகமாக கலெக்ஷன் ஆகியுள்ளதாகவும் டிவிட்டரில் செய்திகள் வைரலாகி வருகின்றன.
ஆனாலும், சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து இதுவரை அபிஸியல் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. அதேநேரம் பாக்ஸ் ஆபிஸில் எப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினி தான் நம்பர் 1 என்றும் அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதற்கு விஜய் ரசிகர்களோ லியோ திரைப்படம் வெளியானால் உண்மை தெரிந்துவிடும் என பதிலடி கொடுத்து வருகின்றனர். ஆனால், கமல் ரசிகர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று, விக்ரம் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டுகளை டிவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
லோகேஷ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சூர்யா, நரேன் உள்ளிட்ட பலர் நடித்த விக்ரம் திரைப்படம் கடந்தாண்டு வெளியானது. யாருமே எதிர்பாராத இண்டஸ்ட்ரி ஹிட் படமாக அமைந்த விக்ரம், பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மாஸ் காட்டியது. முக்கியமாக இந்தப் படம் கமல்ஹாசனுக்கு வெறித்தனமான கம்பேக் கொடுத்தது. அதன்பின்னர் இந்தியன் 2, கல்கி, KH 233, KH 234 என அடுத்தடுத்து படங்களில் பிஸியாகிவிட்டார் கமல்.

இந்நிலையில், விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பின்னர் திரையரங்க உரிமையாளர்களான அபிராமி ராமநாதன், திருப்பூர் சுப்ரமணியம் உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள் கமலுக்கு நன்றி தெரிவித்திருந்தனர். அதாவது கொரோனா காலக்கட்டத்திற்குப் பிறகு திரையரங்குகளின் நிலை என்னவாகுமோ என அச்சத்தில் இருந்தோம். திரையரங்கை மூட வேண்டிய நிலையில் இருந்த போது எங்களை காப்பாற்றி தூக்கி நிற்கவைத்து நம்பிக்கை அளித்த படம் விக்ரம். எந்தவொரு நிலையிலும் கமல்ஹாசன் வசூலில் மேலே செல்லக் கூடியவர் என அவர்கள் பேசிய வீடியோக்களை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
ரஜினியின் ஜெயிலர் படத்தின் வசூல் குறித்து பல தகவல்கள் வைரலாகி வரும் நிலையில், கமலின் விக்ரம் பட பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், விக்ரம் படம் 100 நாட்கள் ஓடியதைப் போல ஜெயிலர் சாதனை படைக்க வாய்ப்பில்லை எனவும் அவர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











