முதல்ல விஸ்வரூபம் 2... கட்சி ஆரம்பிச்ச பிறகு சபாஷ் நாயுடு, இந்தியன் 2! - இது கமல் முடிவு

By Shankar

Recommended Video

முதல்ல விஸ்வரூபம் 2... கட்சி ஆரம்பிச்ச பிறகு சபாஷ் நாயுடு, இந்தியன் 2! - இது கமல் முடிவு

சென்னை: விஸ்வரூபம் 2 படம் வெளியான கையோடு அரசியல் கட்சியை அறிவிப்பார் கமல் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்குவதில் உறுதியாக உள்ளார். எந்தத் தேதியில் தொடங்கப் போகிறார் என்பதை மட்டும் அவர் அறிவிக்கவில்லை.

Kamal to launch party after releasing Viswaroopam 2

இந்த நிலையில் விஸ்வரூபம்-2 படம் வெளியானதும் அரசியலில் குதிப்பார் என்று தற்போது தகவல் கசிந்துள்ளது.

2013-ல் விஸ்வரூபம் படம் வெளியானபோதே, அதன் இரண்டாம் பாகத்தின் 60 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. 2015-ல் 90 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டன. இன்னும் 10 சதவீத படப்பிடிப்பு பாக்கி உள்ளது.

தற்போது அந்த 10 சதவீத காட்சிகள் மட்டும் சென்னையில் படமாகி வருகிறது. ஓரிரு வாரத்தில் முழு படப்பிடிப்பையும் முடிந்துவிடும் என்கிறார்கள். அடுத்த மாதம் (ஜனவரி) 26-ந் தேதி குடியரசு தினத்தன்று படம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

படம் வெளியான கையோடு தனது கட்சி பெயரை கமல்ஹாசன் அறிவித்து அரசியலில் ஈடுபடுவார் என்கிறார்கள் கமல் நற்பணி இயக்கத்தினர்.

ஏற்கனவே சபாஷ்நாயுடு படத்தில் நடிப்பதாக அறிவித்து வெளிநாடுகளில் அதன் முதல் கட்ட படப்பிடிப்பையும் நடத்தி விட்டு வந்தார். அதன்பிறகு வீட்டு படிக்கட்டில் கமல்ஹாசன் தவறி விழுந்து காலில் முறிவு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நின்று போனது. ‌

இடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அப்போதுதான் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவர் நடிக்கப்போவதாக அறிவித்தார். இந்த 2 படங்களின் படப்பிடிப்புகளையும் அரசியலுக்கு வந்த பிறகு தொடர்வார் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X