Kamal Leo: கமலுக்காக லியோ ஸ்பெஷல் ஸ்க்ரீனிங்... உலக நாயகன் ரியாக்‌ஷனுக்காக தளபதி வெயிட்டிங்!

சென்னை: விஜய்யின் லியோ இரு தினங்களுக்கு முன்னர் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

லோகேஷ் இயக்கத்தில் LCU படமாக உருவாகியுள்ள லியோவில் கமல்ஹாசனின் வாய்ஸ் ஓவர் இடம்பெற்றுள்ளது.

இதனால் விக்ரம் 2-வில் விஜய் கேமியோ ரோலில் நடிக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில், விஜய்யின் லியோ திரைப்படம் கமலுக்காக ஸ்பெஷலாக ஸ்க்ரீன் செய்யப்பட்டுள்ளது.

 Kamal Leo: Leo was Screened by Ulaganayagan Kamal Haasan for his circles

கமலுக்காக லியோ ஸ்பெஷல் ஸ்க்ரீனிங்
கோலிவுட் மாஸ் ஹீரோவான விஜய்யின் லியோ திரைப்படம் சொன்னபடி அக்டோபர் 19ம் தேதி வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை லலித் குமார் தயாரித்துள்ளார். அனிருத் இசையில் மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவான லியோ, LCU-ல் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.

இதனால், லியோவை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, உலக நாயகன் கமல் ஃபேன்ஸும் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர். கார்த்தியின் கைதி படத்தில் இருந்து தொடங்கிய LCU, அடுத்து கமல்ஹசனின் விக்ரம் படத்தில் விஸ்வரூபம் எடுத்தது. முக்கியமாக விக்ரம் படத்தில் இருந்து தான் LCU கான்செப்ட்டை தொடங்கினார் லோகேஷ்.

இதனால், விஜய்யின் லியோ உருவாகும் போதே இது LCUன் கீழ் இணையுமா என ரசிகர்கள் கேட்டு வந்தனர். அதற்கு நேற்று முன்தினம் வெளியான லியோவில் விடை கிடைத்தது. ஜார்ஜ் மரியான் கேரக்டர் மூலம் லியோவும் LCU படம் தான் என லீட் கொடுத்த லோகேஷ், க்ளைமேக்ஸ் காட்சியில் கமல்ஹாசனின் வாய்ஸ் ஓவருடன் வைப் கொடுத்தார்.

 Kamal Leo: Leo was Screened by Ulaganayagan Kamal Haasan for his circles

லோகேஷின் இந்த தரமான சம்பவம் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி உலகநாயகன் கமல் ரசிகர்களையும் கொண்டாட வைத்தது. அதுமட்டும் இல்லாமல் அடுத்தடுத்து உருவாகவுள்ள கைதி 2, விக்ரம் 2 படங்களில் விஜய் என்ட்ரி கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், விஜய்யின் லியோ திரைப்படத்தை கமல்ஹாசனுக்கு ஸ்பெஷலாக ஸ்க்ரீனிங் செய்யப்பட்டுள்ளது.

 Kamal Leo: Leo was Screened by Ulaganayagan Kamal Haasan for his circles

கமல் தனது குழுவினருடன் லியோ படத்தை பார்த்த புகைப்படங்கள் டிவிட்டரில் வைரலாகி வருகின்றன. அதேநேரம் லியோ பார்த்ததும் கமலின் ரியாக்‌ஷன் என்ன என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. விரைவில் கமல்ஹாசன் லியோ படத்தின் விமர்சனம் கூறுவார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X