Kamal: "காரியம் ஆகுறவரைக்கும் நட்பு வைக்குற ஆள் கிடையாது... கமல்ஹாசனை நினைச்சு வேதனைபடுறேன்..”
சென்னை: தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் லிவிங்ஸ்டன்.
கே பாக்யராஜ்ஜின் டார்லிங் டார்லிங் டார்லிங் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார்.
இந்நிலையில், கமல்ஹாசன் உடனான நட்பு குறித்து தனது வேதனையை பகிர்ந்துள்ளார் லிவிங்ஸ்டன்.

கமல்ஹாசனை நினைச்சு வேதனைப்படுறேன்: 1982ம் ஆண்டு கே பாக்யராஜ் இயக்கி அவரே ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் டார்லிங் டார்லிங் டார்லிங். அதில் ஸ்டேஷன் மாஸ்டராக நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார் லிவிங்ஸ்டன். ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக திரையுலகில் அறிமுகமான லிவிங்ஸ்டன், பின்னர் முன்னணி நடிகராக வலம் வரத் தொடங்கினார்.
1990களுக்குப் பின்னர் பல படங்களில் ஹீரோவாக நடித்த லிவிங்ஸ்டன், காமெடி, குணச்சித்திரம் என பல கேரக்டர்களிலும் வெரைட்டியாக நடித்துள்ளார். கடைசியாக அவர் கார்கி, தி லெஜெண்ட், மூன்றாம் பவுர்ணமி, கன்னித் தீவு, சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன் பற்றி லிவிங்ஸ்டன் பேசியது வைரலாகி வருகிறது.
கமல்ஹாசன் உடனான நல்ல நட்பை தவறவிட்டு விட்டேன் என வேதனைத் தெரிவித்துள்ளார். அதாவது, "கமல் சார் ஒரு சிறந்த மனிதர், அவர் ஒரு குழந்தை போல. என்னையும் மதிச்சு என்ன வீட்டுக்கு கூப்பிட்டு பாராட்டி அடிக்கடி போன் செய்து பேசுவார். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் கமலை போல யாரையும் பார்க்க முடியாது. காரியம் ஆகுறவரைக்கும் நட்பு வைக்கிற ஆள் அவர் இல்லை, உண்மையான மனிதர்" என்றுள்ளார்.
மேலும், கமல் தன்னிடம் நட்பாக இருந்தாலும், நான் தான் அதனை மெயின்டெய்ன் பண்ணவில்லை. அவர் என்னிடம் பேசிய போதெல்லாம் நான் பொறுப்பில்லாமல் இருந்து விட்டேன். அவரது நட்பை சரியாக பயன்படுத்தியிருந்தால், இப்ப நன்றாக இருந்திருப்பேன் எனக் கூறியுள்ளார். இப்படி பொறுப்பில்லாமல் இருந்ததற்கு கமலிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் லிவிங்ஸ்டன் கூறியுள்ளார்.
இப்போது பல தருணங்களில் கமலின் நட்பை மிஸ் செய்ததை நினைத்து வேதனைப்படுகிறேன் எனவும் லிவிங்ஸ்டன் கண்கலங்கியபடி பேசியுள்ளார். சாய் வித் சித்ராவின் யூடியூப் தளத்துக்கு கொடுத்த பேட்டி ஒன்றில், கமல் பற்றி லிவிங்ஸ்டன் உருக்கமாக பேசியது ரசிகர்களிடம் வைரலாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











