வேற லெவல் கெட்டப்.. விறுவிறு காம்போ.. கமல் ஹாசன், லோகேஷ் கனகராஜ் படத்தின் போட்டோ ஷூட்!

By

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தின் போட்டோஷூட் இன்று நடக்கிறது.

Recommended Video

லோகேஷ் கனகராஜ் படத்தில் கமல ஹாசன்.. வெளியான Kamal Hassan 232 போஸ்டர்

'கைதி' ஹிட்டுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம், மாஸ்டர். விஜய் ஹீரோவாக நடித்துள்ளார்.

விஜய் சேதுபதி வில்லன். மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

ரிலீஸ் ஒத்திவைப்பு

ரிலீஸ் ஒத்திவைப்பு

சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. அந்த நேரத்தில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்ததால், லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது. இதனால் மாஸ்டர் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பேராசிரியராக

பேராசிரியராக

படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். அவர் இசையில் பாடல்கள் ஹிட்டாகி உள்ளன. இதில் பேராசிரியராக நடிக்கிறார், விஜய். கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில், பல படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்படுகின்றன. பொன்மகள் வந்தாள், பெண்குயின் தொடங்கி பல படங்கள் இதுவரை ஓடிடி-யில் ரிலீஸாகியுள்ளன.

பொங்கல் ரிலீஸ்

பொங்கல் ரிலீஸ்

சூர்யாவின் சூரரைப் போற்று படம், அமேசான் பிரைமில் இந்த மாதம் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையே, மாஸ்டர் படமும் ஓடிடியில் வெளியாவதாகக் கூறப்பட்டது. ஆனால், தியேட்டரில்தான் படம் வெளியாகும் என்றும் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்றும் படக்குழு கூறியுள்ளது.

ராஜ்கமல் நிறுவனம்

ராஜ்கமல் நிறுவனம்

இந்நிலையில், இந்தப் படத்துக்கு பிறகு கமல் நடிக்கும் படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. கமல் நடிப்பில் உருவாகும் 232-வது படம் இது. இதில் கமலுக்கு ஜோடியாக யார் நடிக்கிறார் என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளனர்.

எவனென்று நினைத்தாய்

எவனென்று நினைத்தாய்

படத்தின் அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் வெளியிடும் போது #எவனென்று நினைத்தாய் என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி இருந்தார். இதனால் இதுதான் படத்தின் டைட்டில் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் அது வெறும் ஹேஷ்டேக் தான் என்றும், டைட்டில் அல்ல என்றும் ராஜ்கமல் நிறுவனம் தெரிவித்தது.

வேற லெவல் கெட்டப்

வேற லெவல் கெட்டப்

இந்நிலையில், இதில் யார், யார் நடிக்கிறார்கள், மற்ற டெக்னீஷியன்கள் பற்றிய விவரங்களை படக்குழு ரகசியமாக வைத்துள்ளது. இந்தப் படத்தின் போட்டோஷூட் சென்னையில் இன்று நடக்கிறது. இதில் கமல்ஹாசன் கெட்டப் வேற லெவலில் இருக்கிறது என்றும் படத்தில் அட்டகாசமான நடிகர்கள் இணைகிறார்கள் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X