எத்தனை முறை சொன்னாலும் இவர்களுக்கு புரியவில்லை..கடும் கோபத்தில் கமல்..பாலாவுக்கு பாடம் புகட்டுவாரா?

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் கமல் கடும் கோபத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த திங்கள் கிழமை முதல் இரண்டாவது கட்டமாக கால் செண்டர் டாஸ்க் நடைபெற்றது.

இதில் முதல் பார்ட்டில் காலராக இருந்தவர்கள் கால் செண்டர் ஊழியர்களாவும் கால் செண்டர் ஊழியர்களாக இருந்தவர்கள் காலர்களாகவும் இருந்தனர்.

வேற லெவல் விளையாட்டு

வேற லெவல் விளையாட்டு

கடந்த வாரத்தை போன்றே இந்த வாரமும் கால் செண்டர் டாஸ்க்கில் பல்வேறு பிரச்சனைகள் நடந்தேறின. குறிப்பாக பாலாஜியும் அனிதாவும் வேற லெவலில் விளையாடினார்கள். ஆரியை கெட்டவராக மட்டுமே காட்ட வேண்டும் என்று நினைத்தார் பாலாஜி.

பாலாஜியின் வில்லத்தனம்

பாலாஜியின் வில்லத்தனம்

அதற்காக ஆரம்பம் முதல் தற்போது வரை பிக்பாஸ் வீட்டில் அவர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தையும் லிஸ்ட் போட்டு வாசித்த பாலாஜி. உங்களை பேச விடுகிறேன், பதில் சொல்ல நேரம் தருகிறேன் என்று கூறி கடைசியில் காலை கட் செய்துவிட்டார்.

பாலாவின் உண்மை முகம்

பாலாவின் உண்மை முகம்

ஆரியிடம் நேரம் கொடுக்றேன் என்று சொன்னதை மறந்துவிட்டேன், வேண்டுமென்றே காலை கட் பண்ணவில்லை என்றார் பாலாஜி. ஆனால் வெளியில் வந்த பிறகு அவருடைய உண்மை முகம் தெரிய வேண்டும் என்றுதான் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்று தன்னுடைய உண்மை முகத்தை காட்டினார்.

ஹீரோ நினைப்பா?

ஹீரோ நினைப்பா?

இதேபோல் அனிதாவும் தனக்கான வாய்ப்பை பயன்படுத்தி ரியோவை வச்சு செய்தார். ஹீரோ நினைப்பிலேயே இருக்கீங்களா? இன்டிவிட்ஜுவல் பிளேயரா? தேவையில்லாத ஆணி அப்படி இப்படி என வச்சு தீர்த்தார்.

அவமானப்படுத்துவதை..

அவமானப்படுத்துவதை..

இந்நிலையில் சனிக்கிழமையான இன்று, கமல் பங்கேற்கும் முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் பேசும் கமல், மாற்றி மாற்றி பேசுவதையும், குற்றச்சாட்டுக்களுக்கு பதில் சொல்லாமல் அவமானப்படுத்துவதையும் பார்த்தோம் என்று கூறுகிறார்.

என்ன செய்யலாம்?

என்ன செய்யலாம்?

தொடர்ந்து பேசும் கமல் எதிர் கருத்துடையவர்கள் எதிரிகளாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை எத்தனை முறை சொன்னாலும் இவர்களுக்கு புரியவில்லை.. என்ன செய்யலாம்? என்று கேட்டு இன்றிரவு என முடித்துள்ளார்.

பாலாஜியை கண்டிப்பாரா?

பாலாஜியை கண்டிப்பாரா?

இதனை பார்த்த ரசிகர்கள், பாலாஜி ஆரியை பதில் சொல்ல விடாமல் காலை கட் செய்தது, கேப்டன் டாஸ்க்கில் பாலாஜி பொய் சொன்னது, தன்னைத் தானே பாலாஜி செருப்பால் அடித்துக்கொண்டது போன்ற சம்வங்கள் குறித்து பேசுவாரா? பாலாஜியை கண்டிப்பாரா என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X