ஸ்பேஸ் இல்லங்றதுதானே அவங்க பிரச்சனையே.. அனிதாவை கதற கதற கலாய்த்த கமல்.. ஆர்ப்பரித்த ஹவுஸ்மேட்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவில் அனிதாவை வச்சு செய்துள்ளார் நடிகர் கமல்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நாள் முதலே அதிகம் பேசப்பட்டு வருபவர் செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத்.

புரமோவில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் வீட்டில் செய்தி வாசிப்பது, யூடியூப் சேனலில் பேசுவது போன்று கவனத்தை ஈர்ப்பதற்காக ஏதேதோ செய்து வந்தார்.

மரியாதை குறைவாய் பேசுவது

மரியாதை குறைவாய் பேசுவது

தொடர்ந்து சுரேஷ் சக்கரவர்த்தியை சீண்டி வந்தார் அனிதா சம்பத். அவரை நக்கலடிப்பது, மரியாதைக் குறைவாக பேசுவது என வேற லெவலில் இறங்கினார். அவருக்கு எதிராக ஒரு குரூப்பும் ஃபார்ம் பண்ணினார் அனிதா. அனிதா செய்த அட்டகாசத்தால் ஒரு வில்லனை போல் சித்தரிக்கப்பட்டார் சுரேஷ் சக்கரவர்த்தி.

அனிதா சீன்

அனிதா சீன்

கமலுக்கு முன்பு நல்லவரை போல் பேசிவிட்டு மற்ற நேரங்களில் தனது சுயரூபத்தை காட்டி வருகிறார். பிக்பாஸ் வீட்டில் தனக்குதான் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை போல் நடந்து வருகிறார். கடந்த வாரம் நடைபெற்ற சொல்றீயா செய்றீயா டாஸ்க்கின் இறுதியில் எனக்கு பேச வாய்ப்பே இல்லை என சீன் கிரியேட் செய்தார்.

கல்யாணமாயிடுச்சு

கல்யாணமாயிடுச்சு

தனக்கு பிக்பாஸ் வீட்டில் பேச வாய்ப்பே கிடைக்கவில்லை. அதனால்தான் தன்னை பற்றி ஹவுஸ்மேட்ஸுக்கு தெரியவில்லை நாமினேஷன் வரை வந்துள்ளேன் என கூறி அதகளப்படுத்தினார். தனக்கு கல்யாணமாயிடுச்சு தான் ஒன்றும் குழந்தை இல்லை என்றும் கதறினார்.

கமல் கலாய்

கமல் கலாய்

இதனால் பிக்பாஸ் வீடே அல்லோகளப்பட்டது. இந்நிலையில் இன்றைய இரண்டாவது புரமோவில் அனிதா பேசிய டயலாக்குகளை வைத்தே அவரை மரண கலாய் கலாய்த்துள்ளார் கமல். அதாவது எழுந்து நிற்கும் அனிதாவை நீங்க உட்காருங்க நீங்க உட்காருங்க என்று கூறும் கமல் அனிதாவுக்கு ஸ்பேஸ் இல்லை என்பதுதானே அவருடைய பிரச்சனை என கூறியுள்ளார்.

ஜாக்கிரதையா இருங்க

ஜாக்கிரதையா இருங்க

கமல் சொல்லியதை கேட்ட ஹவுஸ்மேட்ஸ் கைகளை தட்டி சிரித்து மகிழ்கின்றனர். தொடர்ந்து பேசும் அனிதா, இடைப்பட்ட நாங்களே பேசிக்கொண்டிருப்போம் என்கிறார் அனிதா. அதற்கு ஸ்பேஸே விடாமல் பேசுவது நீங்கதான்னு எனக்கு தோனுது என்ற கமல், ஸ்பேஸ் இல்லன்னு சொல்றவங்கக்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க என்றும் எச்சரித்தார் கமல்.

கமல் நக்கல் சிரிப்பு

கமல் நக்கல் சிரிப்பு

மேலும் இடம் கொடுங்க.. ஆனா ரொம்ப கொடுத்துறாதீங்க.. நீங்க ரொம்ப கவலையும் படாதீங்க என்றார் கமல். அதற்கு சார் நீங்கள் என்ன சொன்னாலும் என்னை கலாய்ப்பது போன்றே உள்ளது என்றார் அனிதா. அதனை பார்த்த கமல் அய்யோ புடிச்சுட்டாங்கப்பா என்று வாயில் கையை வைத்து நக்கலாய் சிரித்துள்ளார் கமல். இப்படியாக உள்ளது பிக்பாஸின் இரண்டாவது புரமோ.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X