KH 234 - தரமான சம்பவம் லோடிங்.. வெளியானது கமல் - மணிரத்னம் படத்தின் புதிய போஸ்டர்
சென்னை: KH 234 Poster (கமல் மணிரத்னம் பட போஸ்டர்) கமல் ஹாசனும், மணிரத்னமும் இணையும் KH 234 படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியிருக்கிறது.
விக்ரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுத்த கமல் ஹாசன் தரமான வெற்றியை அதில் பதிவு செய்தார். அந்த வெற்றியின் உற்சாகத்தால் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகிவருகிறார். அதன்படி அடுத்ததாக அவரது நடிப்பில் இந்தியன் 2, ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படம், மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம் வெளியாகவிருக்கிறது.

கமல் - மணிரத்னம்: கமல் ஹாசனும், மணிரத்னமும் ஏற்கனவே இணைந்து நாயகன் படத்தை கொடுத்தனர். அந்தப் படம் இந்தியாவிலேயே தலைசிறந்த படமாக கொண்டாடப்படுகிறது. எந்த டான் படம் வந்தாலும் அதில் நாயகனின் டச் இருக்கும் அளவுக்கு அந்தப் படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் கூட்டணி: இப்படிப்பட்ட சூழலில்தான் கமல் ஹாசனும் மணிரத்னமும் மீண்டும் இணைகிறார்கள் என்ற அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதன்படி படத்தை ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. வழக்கம்போல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். த்ரிஷாவும், நயன்தாராவும் இணைந்து இந்தப் படத்தில் நடிக்கவிருப்பதாக ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.
டீசர் ஷூட்டிங்: சமீபத்தில் படத்தின் டீசர் ஷூட்டிங் நடந்தது. இதில் மணிரத்னம், கமல் ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அந்த டீசர் ஷூட்டிங்கின்போது இந்தப் படத்தில் யார் யார் பணியாற்றுகிறார்கள் என்பது குறித்த அறிவிப்பும் அட்டகாசமாக வெளியிடப்பட்டது. ஆச்சரியமாக இந்தப் படத்தின் சண்டை பயிற்சியாளர்களால அன்பறிவ் மாஸ்டர்ஸ் பணியாற்றுகின்றனர். எனவே ஆக்ஷன் காட்சிகளில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மாலை தலைப்பு: இந்நிலையில் கமல் - மணிரத்னம் இணையும் படத்தின் பெயர் இன்று மாலை வீடியோவுடன் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட் செய்துகொண்டிருக்கிறார். நிலைமை இப்படி இருக்க தற்போது படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியிருக்கிறது. அதில் கமல் ஹாசன் முகம் முழுக்க மூடியிருக்க அவரது கண்கள் மட்டும் தெரிகின்றன. மேலும் பின்னணியில் குண்டு வெடித்து எழும் புகை போன்றும் இடம்பெற்றிருக்கிறது. இதனால் இந்தப் படம் பக்கா ஆக்ஷன் ஜானரில் வரவிருக்கிறதோ என்ற கேள்வியும் ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











