ஏப்ரல் முதல் வாரம் உத்தம வில்லன் ரிலீஸ்!
கமல் ஹாஸன் நடிப்பில் உருவாகியுள்ள உத்தம வில்லன் படம் வரும் ஏப்ரல் முதல் வாரம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கமலின் நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

மார்ச் 1-ல் ஆடியோ
ஆண்ட்ரியா, பூஜாகுமார், பார்வதி, நாசர் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், படத்தின் ஆடியோவை வருகிற மார்ச் 1-ந் தேதி வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர். இந்த ஆடியோ வெளியீட்டை பிரம்மாண்டமாகவும் நடத்த முடிவு செய்துள்ளனர்.

ஏப்ரல் 3-ம் தேதி?
இந்நிலையில், இப்படத்தை வருகிற ஏப்ரல் 3-ம் தேதி வெளியிடப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், படம் வெளியாகும் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

கே பாலச்சந்தர்
கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வரூபம்-2', ‘பாபநாசம்' ஆகிய படங்கள் இப்படத்திற்கு பிறகே வெளியாக உள்ளன. ‘உத்தமவில்லன்' படத்தில் மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இரு வேடங்கள்
படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தெய்யாட்டக் கலைஞராகவும், ஒரு முன்னணி நடிகராகவும் இந்தப் படத்தில் தோன்றுகிறார் கமல்.


Click it and Unblock the Notifications











