கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவுக்கு கமல் ஹாஸனை கூப்பிடவே இல்லையாமே!
சென்னை: திருவிழா போன்று நடந்த கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவுக்கு ரஜினியின் நெருங்கிய நண்பரான கமல் ஹாஸன் அழைக்கப்படவில்லை.
ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்துள்ள கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் ரஜினியின் நெருங்கிய தோழரை காணவில்லை. இது குறித்து படத்தின் இயக்குனர் சௌந்தர்யா அஸ்வின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

கமல்
ரஜினியின் நண்பர் கமல் ஹாஸனை ஏன் விழாவுக்கு அழைக்கவில்லை என்று சௌந்தர்யாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், நான் அவரை அழைக்க தான் நினைத்தேன். ஆனால் அவர் உத்தம வில்லன் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் அவரால் வர முடியாது என்றார்.

2 ஆண்டுகள்
கோச்சடையான் படத்தை முடிக்க 2 ஆண்டுகள் ஆகிவிட்டதே என்ற கேள்விக்கு சௌந்தர்யா அளித்த பதில், மோஷன் கேப்சர் டெக்னாலஜியை பயன்படுத்தியதால் தான் காலதாமதமாகிவிட்டது என்றார்.

வாலி
பெயர்கள் வருகையில் வைரமுத்துவின் பெயருக்கு பிறகு வாலியின் பெயர் வருகிறதே என்று கேட்டதற்கு, வாலி ஒரு பாடல் தான் எழுதியுள்ளார். வைரமுத்து தான் மீதமுள்ள பாடல்களை எழுதியுள்ளார். அதனால் தான் வைரமுத்துவின் பெயர் முதலில் போட்டப்பட்டுள்ளது என்றார் சௌந்தர்யா.

சீனியர்
வாலி என்ன தான் இருந்தாலும் மூத்த கவிஞராச்சே, அவரது பெயரை முதலில் போட்டிருக்க வேண்டாமா என்று ஒரு பத்திரிக்கையாளர் கேட்டார். அதற்கு சௌந்தர்யா ஏற்கனவே அளித்த பதிலையே மீண்டும் கூறினார்.


Click it and Unblock the Notifications











