Kamal On Project K: பிரபாஸின் Project K படத்தில் இணைந்த உலக நாயகன்... கமலின் அடுத்த சம்பவம்

ஹைதராபாத்: பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் நெகட்டிவான விமர்சனங்களால் படுதோல்வியடைந்துள்ளது.

இதனை சமாளிக்கும் விதமாக பிரபாஸின் அடுத்தடுத்த படங்களில் இருந்து தரமான அப்டேட் வெளியாகி வருகிறது.

அதன்படி தற்போது ப்ராஜெக்ட் கே படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

 Kamal On Project K: Ulaga Nayagan Kamal Hassan has joined Prabhass Project K film

பிரபாஸின் ப்ராஜெக்ட் கே படத்தில் இணைந்த கமல்: பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் கடந்த 16ம் தேதி வெளியானது. ஓம் ரவத் இயக்கியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடம் நெகட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இதனால் அடுத்தடுத்து தனது சலார், ப்ராஜெக்ட் கே படங்களின் அப்டேட்டை வெளியிட்டு வருகிறார் பிரபாஸ். அதன்படி தற்போது தரமான ஒரு அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

பிரபாஸ் நடிப்பில் 2020ம் ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் ப்ராஜெக்ட் கே. வைஜெயந்தி மூவிஸின் 50வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்தப் படம் அறிவிக்கப்பட்டது. அப்போது கோவிட் பரவல் அதிகமாக இருந்ததால், படப்பிடிப்பு தாமதமானது. பிரபாஸுடன் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடிப்பதையும் படக்குழு கன்ஃபார்ம் செய்தது. அதேபோல், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் கமிட்டானார்.

 Kamal On Project K: Ulaga Nayagan Kamal Hassan has joined Prabhass Project K film

நாக் அஸ்வின் இயக்கத்தில் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ப்ராஜெக்ட் கே, மிரட்டலான ஆக்‌ஷன் ஜானர் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பதாக தற்போது படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே இதுபற்றி கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி வந்தன. பிரபாஸின் ப்ராஜெக்ட் கே படத்தில் கமல் தான் வில்லனாக நடிப்பதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில், ப்ராஜெக்ட் கே படத்தில் கமல்ஹாசன் நடிப்பதாக வைஜெயந்தி பிலிம்ஸ் அபிஸியலாக அறிவித்துள்ளது. இதற்காக மினி டீசரையும் வெளியிட்டு கமல் ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்துள்ளது. அதில் எங்களுக்கு ஒரு சூப்பர் ஸ்டார் தேவைப்பட்டார், அது உலகநாயகன் கமல் தான். ப்ராஜெக்ட் கே படத்தில் கமல்ஹாசன் இணைந்துள்ளார் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம் என படக்குழு கூறியுள்ளது.

இதனால், ப்ராஜெக்ட் கே படத்தின் எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறியுள்ளது. இந்தப் படம் 2024 பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 12ம் தேதி வெளியாகவுள்ளது. விக்ரம் படத்தில் வெறித்தனமாக கம்பேக் கொடுத்த கமல், அடுத்து இந்தியன் 2ம் பாகத்திலும் சம்பவம் செய்ய ரெடியாகிவிட்டார். இதனிடையே தற்போது பான் இந்தியா படமான ப்ராஜெக்ட் கே-வில் கமல்ஹாசன் இணைந்துள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X