இணைகிறதா கமல் - பா ரஞ்சித் கூட்டணி... காத்திருந்து ஏமாந்துபோன H வினோத்?

சென்னை: விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார் கமல்.
ஷங்கர் இயக்கும் இந்தத் திரைப்படம் இந்தாண்டு ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் படத்தில் கமல் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இந்தப் படத்திற்கு முன்னதாக கமல் நடிக்கும் படம் குறித்து தற்போது தகவல் கிடைத்துள்ளது.

 கம்பேக் கொடுத்த கமல்

கம்பேக் கொடுத்த கமல்

விக்ரம் திரைப்படம் மூலம் வெறித்தனமாக கம்பேக் கொடுத்துள்ள கமல்ஹாசன், தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கமலின் அடுத்த படம் பற்றிய அபிஸியல் அப்டேட் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. அதன்படி, நாயகன் படத்துக்கு பின்னர் மணிரத்னம் - கமல் காம்போ 33 ஆண்டுகளுக்குப் பின்னர் இணைவது உறுதியாகியுள்ளது.

 ஏமாற்றத்தில் ஹெச் வினோத்

ஏமாற்றத்தில் ஹெச் வினோத்

மணிரத்னம் கூட்டணியில் இணையும் முன்னர் ஹெச் வினோத் இயக்கும் ஒரு படத்தில் கமல் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த சில தினங்களாக இந்தக் கூட்டணி பற்றிய செய்திகள் அடுத்தடுத்து வெளியாகி வந்தன. அஜித்துடன் தொடர்ந்து மூன்று படங்களில் பணிபுரிந்த ஹெச் வினோத், முதன்முறையாக கமலுடன் இணையலாம் என்ற தகவல் ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், தற்போது இந்தக் கூட்டணியில் படம் உருவாகுவது சந்தேகம் என்றே தெரிகிறது.

 பா ரஞ்சித்துடன் இணையும் கமல்

பா ரஞ்சித்துடன் இணையும் கமல்

ஹெச் வினோத்துக்கு பதிலாக கமல் பா ரஞ்சித் படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளாராம். கடந்தாண்டு நடைபெற்ற விக்ரம் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பா ரஞ்சித்தும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய பா ரஞ்சித், கமல் சாருக்காக ஒரு கதை ரெடியாக இருக்கிறது. அது மதுரை பின்னணியில் இருக்கும் என கூறி செம்ம சர்ப்ரைஸ் கொடுத்தார். அதேமேடையில் கமலும் ரஞ்சித்திடம் ஓக்கே சொன்னார். சீக்கிரம் கதை ரெடி பண்ணுங்க, சேர்ந்து படம் பண்ணலாம் என அதிரடியாக அறிவித்தார்.

 விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

ஆனால், அதன்பின்னர் இந்தக் கூட்டணி பற்றிய அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. பா ரஞ்சித் விக்ரம் நடிப்பில் தங்கலான் படத்தை இயக்கி வருகிறர்ர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவுக்கு வரும் என சொல்லப்படுகிறது. அதனால் அடுத்து உடனடியாக கமல் படத்தை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால் தான் ஹெச் வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது. அதனால் ஹெச் வினோத்தும் தனுஷின் படத்தை இயக்க ரெடியாகிவிட்டாராம். ஆனாலும் இந்த கூட்டணி பற்றியோ அல்லது கூட்டணி மாற்றம் குறித்தோ எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X