ஒரே மாதத்தில் பாபநாசம் 2 படத்தை முடிக்க கமல் திட்டம்? தீயாய் பரவும் தகவல்!

சென்னை: பாபநாசம் 2 படத்தை ஒரே மாதத்தில் நடித்து முடிக்க நடிகர் கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Drishyam 2 Remakeல் Kamal நடிப்பாரா? | Kamal vs Mohanlal | Suyambulingam vs George Kutty

மோகன் லால், மீனா நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான படம் திரிஷ்யம். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

திரிஷ்யம் படம் தமிழ் தெலுங்கு இந்தி என மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வசூலை குவித்தது.

நெகட்டிவ் விமர்சனங்கள்

நெகட்டிவ் விமர்சனங்கள்

இதில் தமிழில் கமல்ஹாசன் மற்றும் கவுதமி லீடிங் ரோலில் நடித்திருந்தனர். பாபநாசம் என்ற பெயரில் இப்படம் வெளியானது. இதில் கவுதமியின் நடிப்புக்கு சற்று நெகட்டிவான விமர்சனங்கள் எழுந்த போதும் கமலின் நடிப்பை பாராட்டி தள்ளினர்.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

இந்நிலையில் திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமாக திரிஷ்யம் 2 படம் அண்மையில் அமேஸான் ப்ரைமில் வெளியானது. இதில் மோகன் லால், மீனா, அன்சிபா, எஸ்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கமல் நடிப்பாரா?

கமல் நடிப்பாரா?

ஜித்து ஜோசப்பின் ஸ்க்ரீன்பிளே, மோகன் லாலின் நடிப்பு பலரின் பாராட்டையும் பெற்றது. இந்நிலையில் இந்தப் படமும் தமிழில் ரீமேக் ஆகுமா? அரசியலில் பிஸியாக உள்ள கமல் இந்தப் படத்தில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது.

இயக்குநர் விளக்கம்

இயக்குநர் விளக்கம்

கமல் கூறினால் பாபநாசம் 2 படத்தை இயக்க தயார் என ஜித்து ஜோசப் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கமல்ஹாசனுடன் இதுகுறித்து பேச திரிஷ்யம் 2 படக்குழுவினர் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அறிவிப்பு இல்லை

அறிவிப்பு இல்லை

இதனிடையே நடிகர் கமல்ஹாசனும் ஒரு மாதத்தில் பாபநாசம் 2 படத்தை நடித்து முடித்து கொடுத்துவிடலாம் என்று திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X