கேப்டன் டாஸ்க்கில் செய்த சில்லறைத்தனம்.. குறும்படம் போட்டு கிழித்த கமல்.. பாலாஜிக்கு செம சவுக்கடி!

சென்னை: கேப்டன் டாஸ்க்கில் தான் தவறு செய்யவில்லை என்று வாய் சவடால் விட்ட பாலாஜிக்கு குறும்படம் போட்டு கிழித்தார் கமல்.

பிக்பாஸ் வீட்டில் கடந்த திங்கள் கிழமை கேப்டன் டாஸ்க் நடைபெற்றது.

இந்த டாஸ்க்கில் ஜித்தன் ரமேஷ், ரம்யா பாண்டியன் மற்றும் பாலாஜி ஆகிய 3 பேர் பங்கேற்றனர்.

மேலே கட்டப்பட்ட வலை

மேலே கட்டப்பட்ட வலை

இதில் கார்டன் ஏரியாவில் மேலே கட்டப்பட்ட வலையில் சிவப்பு, பச்சை, வயலெட் என மூன்று நிறங்களில் பல க்யூப்கள் கொட்டப்பட்டிருந்தன. தலைக்கு மேல் கட்டப்பட்டிருந்த அந்த வலையில் இருந்த க்யூப்களில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிறத்தில் இருந்த க்யூப்களை மட்டும் போட்டியாளர்கள் தட்டி தட்டி கீழே விழ செய்ய வேண்டும்.

நெகட்டிவ் பாயிண்ட்ஸ்

நெகட்டிவ் பாயிண்ட்ஸ்

அப்படி யார் அதிகமாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிறத்தை தேர்வு செய்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். அதில் மற்றவருக்கு ஒதுக்கப்பட்ட க்யூப்பை கீழே தள்ளினால் பாயிண்ட்ஸ் மைனஸ் செய்யப்படும். இந்நிலையில் பாலாஜி தட்டிவிடும் க்யூப்களை கண்காணிக்க ரியோ, ஆரியை அசைன் செய்திருந்தார்.

எகிறிய பாலாஜி

எகிறிய பாலாஜி

போட்டியின் இறுதியில் க்யூப்களை கவுண்ட் செய்யும் போது ஆரி முதலில் 4 க்யூப்களை தட்டிவிட்டாய். மற்ற இரண்டு க்யூப்கள் கோட்டை தாண்டி விழுந்தது என்று கணக்கு சொன்னார். ஆனால் பாலாஜி நான் தட்டிவிடவில்லை என எகிற, பின்வாங்கினார் ஆரி.

பின்வாங்கிய ஆரி

பின்வாங்கிய ஆரி

இதனால் ஆரி மாற்றி மாற்றி பேசுவதாக பாலாஜி குற்றம் சாட்டினார். சனம் ஷெட்டியும் ஆரி மாற்றி பேசுவதாக கூறினார். இதனால் பிக்பாஸ் வீட்டில் சலசலப்பு ஏற்பட்டது. தான் மாற்றி மாற்றி பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தான் சொல்வதை ஏற்க வேண்டாம் என ரியோவிடம் கூறினார் ஆரி.

நேர்மை என்று பொய்

நேர்மை என்று பொய்

பாலாஜி சொன்ன கணக்கின் படியே பார்த்த போதும் ஜித்தன் ரமேஷே வெற்றி பெற்றதாக அறிவித்தார் ரியோ. இருந்த போதும் அதனை விடாத பாலாஜி தன்னுடைய தோல்விக்கு ஆரிதான் காரணம் என எல்லோரிடமும் புலம்பினார். நேர்மை நேர்மை என்று பொய் சொல்கிறார் என இழிவாக பேசினார்.

நாசம் செய்த நெட்டிசன்ஸ்

நாசம் செய்த நெட்டிசன்ஸ்

ஆனால் அப்போதே பாலாஜி தட்டிவிட்டது உண்மைதான் என்பதை போல எபிசோடிலேயே குறும்படம் போட்டு காட்டப்பட்டது. அதே போல் சமூக வலைதளங்களிலும் பாலாஜியின் முகத்திரை கிழிந்தது என குறும்படங்களை போட்டு நாசம் செய்தனர் நெட்டிசன்கள்.

அடித்து பேசிய பாலாஜி

அடித்து பேசிய பாலாஜி

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் கேப்டன் டாஸ்க் விவகாரத்தை கையில் எடுத்தார் கமல். அப்போதும் ஆரியால்தான் தன்னுடைய வெற்றி பறிபோயிவிட்டதாக பேசினார் பாலாஜி. ரம்யாவுக்கு சோம் அசைன் பண்ணியிருந்தாங்க.

குளறுபடி நடந்துச்சு

குளறுபடி நடந்துச்சு

ஜித்தன் ரமேஷுக்கு ரியோ அசைன் பண்ணியிருந்தாங்க. ஆனா எனக்கு மட்டும் ஆரியை அசைன் பண்ணியிருந்தாங்க. வாண்ட்டட்டா பண்ணினாங்களான்னு தெரியல. முதல்ல நாளு கலர் க்யூப்ஸ்ன்னாங்க. அப்புறம் வேற ரெண்டுன்னாங்க. அப்புறம் ஒன்னுன்னாங்க. ரொம்ப குளறுபடி நடந்துச்சு சார் என்றார்.

குறும்படம் இல்ல நெடும்படம்

குறும்படம் இல்ல நெடும்படம்

இதனைக்கேட்ட கமல், சரி என்ன நடந்துச்சு என்பதை பார்க்கலாமா என்றார். அதற்கு ஆரி ரொம்ப ஹேப்பியா ஓகே என்றார். குறும்படம், நெடும்படமாகவே காட்டப்பட்டது. அதில் மொத்தமாக பாலாஜி தட்டிவிட்ட க்யூப்களை காட்டி கிழித்து விட்டனர்.

நிம்மதி பெருமூச்சு

நிம்மதி பெருமூச்சு

குறும்படத்தை பார்த்த பிறகு ஆரி, ரமேஷ், மற்றும் ரியோ ஆகிய மூன்று பேருக்கும் அப்படி ஒரு மகிழ்ச்சி முகத்தில் தெரிந்தது. தாங்கள் எதுவும் தவறு செய்யவில்லை பாலாஜி செய்ததுதான் தவறு என தெள்ளத் தெளிவாக தெரிந்ததால் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

மெண்டல் பிளாக்

மெண்டல் பிளாக்

தொடர்ந்து பாலாஜியிடம் வந்த கமல், உங்களுக்கு ஒரு மெண்டல் பிளாக் இருப்பது தெளிவாக தெரிகிறது பாலாஜி என்றார். மேலும் ஆரி தனக்கு தவறுதான் செய்வார் என்று நினைத்து கொண்டிருக்கிறீர்கள். பாலாவுக்கு மை வே ஹைவே ஆட்டியூட். ஹைவே என்றாலும் பர்மிஷன் கேட்டுதான் போடணும் என 8 வழிச்சாலை அரசியலையும் பேசினார்.

நியாயத்துக்கு சேர மாட்றீங்களே..

நியாயத்துக்கு சேர மாட்றீங்களே..

தொடர்ந்து பேசிய கமல், எல்லாரும் சொல்லும் போதும் நீங்கள் கேட்கவில்லை என்றார். மேலும் எல்லாத்துக்கும் கேங் சேருகிறீர்கள். நியாயத்துக்கு கேங் சேர மாட்றீங்களே என்றும் விளாசிய கமல், சனம் ஷெட்டியிடம் சாரி கேட்பது தொடர்பாக பேசினார்.

மன்னிப்பு கேட்ட கமல்

மன்னிப்பு கேட்ட கமல்

அதற்கு பதில் சொன்ன பாலாஜி, இப்போ மன்னிப்பு கேட்டு டிராமா பண்ண விரும்பல என்றார். அதற்கு எனக்கு எதுவும் டிராமா இல்லை என்ற கமல், சனம் ஷெட்டியிடம் நடந்தவைக்காக மன்னிப்பு கேட்டார். அதனை கேட்ட சனம், சார் நீங்கள் கேட்கக்கூடாது என்றார்.

Recommended Video

நண்பர்கள் என்மேல கோப பட்டாங்க | CLOSE CALL WITH ACTRESS SWARNAMALYA PART-01 |FILMIBEAT TAMIL
மன்னிப்பு கேட்ட அர்ச்சனா

மன்னிப்பு கேட்ட அர்ச்சனா

அதற்கு அதுவும் என் வீடுதான் என்றார் கமல். அதனை பார்த்தப் பிறகு சாரி சனம் என சனம் ஷெட்டியிடம் ஒரு வழியாய் மன்னிப்பு கேட்டார் பாலாஜி. அதன்பிறகு ஹவுஸ்மேட்ஸ் சார்பாக சனம் ஷெட்டியிடம் மன்னிப்பு கேட்டார் அர்ச்சனா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X