கேப்டன் டாஸ்க்கில் போங்காட்டம்.. குறும்படம் போட்டு பாலாஜியை கிழித்து தொங்கவிட்ட கமல்!

சென்னை: பிக்பாஸ் கேப்டன்ஸி டாஸ்க்கில் போங்காட்டம் ஆடி மிரட்டிய பாலாஜியை குறும்படம் போட்டு கிழித்து தொங்கவிட்டுள்ளார் கமல்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில், தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்ட பாலாஜியை கடுமையாக எச்சரித்தார் கமல்.

இதனை பார்த்த ரசிகர்கள் தும்பைவிட்டு வாலை பிடிக்காதீர்கள் ஆண்டவரே என கமலை வறுத்தனர். அதேநேரத்தில் சிலர் இப்போதாவது முழிச்சீங்களே என கமலை பாராட்டினர்.

கேப்டன் டாஸ்க்

கேப்டன் டாஸ்க்

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நான்காவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் கேப்டன்ஸி டாஸ்க் குறித்து பேசுகிறார் கமல். கேப்டன்ஸி டாஸ்க்கில் ஜித்தன் ரமேஷ், ரம்யா பாண்டியன் மற்றும் பாலாஜி ஆகிய 3 பேர் பங்கேற்றனர்.

ஆரிதான் காரணம்

ஆரிதான் காரணம்

இதில் ரமேஷ் வெற்றி பெற்றார். தான் தோற்றதற்கு ஆரி மாற்றி மாற்றி பேசியதுதான் காரணம் என கூறினார் பாலாஜி. மேலும் ஆரி ஒரு பொய்யர் என்றும் களங்கப்படுத்தினார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் அந்த விவகாரத்தை கமல் கையில் எடுத்துள்ளது நான்காவது புரமோவில் தெரியவந்துள்ளது.

பாலாஜிக்கு குறும்படம்

பாலாஜிக்கு குறும்படம்

அப்போதும் கமலிடம் நான் தட்டி விடவில்லை என அடித்து பேசினார் பாலாஜி. அதனை உறுதிப்படுத்தும் வகையில் அவருக்கு குறும்படம் போட்டு கிழித்து தொங்கவிட்டுள்ளார் கமல். குறும்படத்தை பார்த்து பாலாஜியின் முகம் அப்படியே மாறிவிட்டது.

Recommended Video

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் கதை குறித்த சுவாரசிய தகவல் - டாப் 5 பீட்ஸ்
வரைமுறையே இல்லை

வரைமுறையே இல்லை

குறும்படத்தை பார்த்து ஆரி, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் கைத்தட்டி சிரிக்கின்றனர். பாலாஜி பல விஷயங்களில் பிக்பாஸ் வீட்டில் பொய் புரட்டு என இருந்து வருகிறார். டபுள் கேம் ஆடுவது கொளுத்திப்போடுவது என வரைமுறையே இல்லாமல் பார்வையாளர்களின் பிபியை எகிற வைத்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X